எங்க அண்ணனுக்கு நான் தான் பண்ணுவேன்! என்று அடித்துக் கூறும் இயக்குனர் அட்லி இப்போதும் ஏதோ பண்ணி விட்டாரோ என்று ஆனந்தத்தில் இருக்கிறார்கள் தளபதி விஜய் ரசிகர்கள்.பிரபல இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக இருந்தவர் அட்லி.
இவர் முதன்முதலில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா ஆகியோரை வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார். மௌனமாக இவர் எடுத்த இந்த படம் பெரிய அளவில் மக்களால் பேசப்பட்டது.அதன்பின் தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல் என திரைப்படங்களை அடுத்தடுத்து இயக்கி மேலும் அனைவரின் எதிர்பார்ப்பையும் பெற்றார்.
அடுத்த படமும் விஜய்யை வைத்து தான் இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் பாலிவுட்டுக்கு சென்றார்.
நடிகர் சாருக் கானை வைத்து ஜவான் என்ற ஹிந்தி திரைப்படத்தை இயக்கி வருகிறார்..
இதில் ஷாருக்கான் உடன் நயன்தாரா, விஜய் சேதுபதி யோகி பாபு உள்ளிட்டோரும் இணைந்து உள்ளனர்.
இப்படத்தை ஷாருக்கானின் சொந்த நிறுவனமான ரெட் சில்லி என்டர்டைன்மென்ட் தயாரிப்பது மேலும் சிறப்பு.இதன் ட்ரெய்லர் வெளியாகி அதிரிபுதிரியாகி கொண்டிருக்கிறது. ஒரே நாளில் 100 மில்லியன் பார்வைகளையும் தாண்டி தட்டி தூக்கி உள்ளது.
கலவையான விமர்சனங்கள் வந்த போதும் வரவேற்பு க்கும் பாராட்டுதலுக்கும் எந்த பஞ்சமும் இல்லை எனலாம். இந்த சூழ்நிலையில் ஜவான் படத்தின் சண்டை பயிற்சியாளர் ஆன யானிக் பென் சமீபத்திய நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பதில் அளிக்கும் போது ஷாருக்கானும் விஜய்யும் தோன்றும் சண்டைக் காட்சிகள் ச்ச்சும்மா அதிரும் என்று சொல்லி ரொம்ப அதிர்ச்சி கொடுத்தார்.
பின்பு சுதாரித்துக் கொண்டு நான் விஜய் சேதுபதியை குறிப்பிட்டேன் என்று மலுப்பியுள்ளார்.ஆனால் விஜய் ஜவான் படத்தில் வருவார் என்று பல இடங்களில் மறைமுகமாக படக்குழு தெரிவித்து வருவதாகவே ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
விஜய் திரையில் தோன்றுவது காட்சிகள் ஆகுமா? கானல் நீர் ஆகுமா? என்று திரைக்கு வந்த பின் தான் வெளிச்சம். விக்ரம் 2 படத்தில் சூர்யா நடிப்பதை இறுதி வரை சொல்லாமல் ரகசியம் காத்தார் லோகேஷ். ஆனால் ஐந்து நிமிடமே வந்தாலும் அதகளம் செய்து மாஸ் காட்டி இருப்பார் ரோலக்ஸ் சார்.
ஜவான் படத்திலும் அப்படி ஒரு விறுவிறுப்பை தளபதி விஜய் ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இருந்தாலும் இதையுமா அதை பார்த்து காப்பியடிப்பது என்று கலாய்த்தும் வருகின்றனர்..