Tuesday, July 8, 2025
- Advertisement -
Homeசினிமாவிவகாரத்து ஆன பிறகும் காதல்.. ராமராஜனை பெரிய ஆளாக மாற்றியதே நான் தான்- நளினி

விவகாரத்து ஆன பிறகும் காதல்.. ராமராஜனை பெரிய ஆளாக மாற்றியதே நான் தான்- நளினி

1983 ஆம் ஆண்டு சரணாலயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகர் நளினி. இதற்கு முன்பு அவர் 1981 லிருந்து ராணுவ வீரன் உயிர் உள்ளவரை உஷா போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் அவரை கதாநாயகியாக பிரபலப்படுத்தியது சரணாலயம் திரைப்படமும். அதே தொடர்ந்து வந்த மனைவி சொல்லி மந்திரம், நூறாவது நாள், ஓசை நல்ல நாள் வீட்டுக்கு ஒரு கண்ணகி கீதாஞ்சலி போன்ற திரைப்படங்கள் ஆகும்.

இப்படி சினிமாவில் பிரபலமாகி வந்து கொண்டிருந்த நடிகை நளினி தமிழ் சினிமாவில் எளிமையாக இருந்து பிரபலமான நடிகர் ராமராஜனை காதல் திருமணம் செய்து கொண்டார். எங்க ஊரு பாட்டுக்காரன், மனசுக்கேத்த மகராசன், எங்க ஊரு நல்ல ஊரு, ஊருவிட்டு ஊரு வந்து, கரகாட்டக்காரன் போன்ற பல திரைப்படங்களில் கிராமத்து பாணியில் கதாநாயகனாக நடித்துக் கலக்கி வந்தவர் தான் நடிகர் ராமராஜன்.

- Advertisement -

கடந்த 2012ல் மேதை என்ற திரைப்படத்தில் ராமராஜன் நடித்திருந்தார் இந்த திரைப்படம் எந்த ஒரு வரவேற்பையும் பெறவில்லை. மேலும் தற்பொழுது ஆண்டுகளுக்குப் பிறகு சாமானியன் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ராமராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

1988 இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள் ஏறுத்தாளை பன்னிரண்டு வருடங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்திருக்கிறார்கள் .அதற்குப் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் சட்டரீதியாகவே இருவரும் பிரிந்து விட்டார்கள் தற்பொழுது சின்னத்திரையில் நடித்து வரும் நடிகை நளினி ஒரு பேட்டியில் தன் கடந்த காலத்தை பற்றி ஒரு சில வார்த்தைகளை பேசி இருக்கிறார்.

ஒருவரை ஒருவர் பிரிந்து இருந்தாலும் நான் என் கணவர் ராமராஜனை இன்னும் விரும்பிக் கொண்டுதான் இருக்கிறேன் என்பதை அந்த பேட்டியில் நடிகை நளினி குறிப்பிட்டு இருந்தார்.க் மேலும் நடிகை நளினியின் திரைப்படங்கள் ஆடம்பரம் இல்லாத எளிமையான கூரைகளும் கொட்டாய்களும் போடப்பட்ட தியேட்டர்களில் வெளியிடப்பட்டதை பார்த்தாராம்.

இதை அடுத்து ராமராஜன் சொந்தமாக தியேட்டர் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தாராம். அதுதான் சாக்கு என்று அவரை உசுப்பேத்தி உசுப்பேத்தி நான்கு தியேட்டர்களை சொந்தமாக வாங்க வைத்தேன் என்று நடிகை நளினி கூறியிருந்தார்.

இதிலிருந்து இவர்கள் இருவரும் சேர்ந்து வாழும் பொழுதே இவர்களுக்குள் நல்ல மனப்பொருத்தம் இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. ஒருவரை ஒருவர் பிரிந்தாலும் இருவரும் விரும்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Most Popular