Featured

100, 200 நாட்களை கடந்து வருடக்கணக்கில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்த தமிழ் திரைப்படங்களின் தொகுப்பு

ஒரு திரைப்படம் திரையரங்கில் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் 50 நாட்கள் ஓடினாலே மிகப் பெரிய விஷயம்தான். அதற்கு காரணம் அடுத்தடுத்து நிறைய திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் வெளிவருவதுதான். அதுமட்டுமின்றி தற்பொழுது வரும் திரைப்படங்கள்
ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில், அத்திரைப்படம் வெளிவந்த 1-2 மாதங்களிலேயே ஒளிபரப்பப்படுகிறது.

இவற்றையெல்லாம் மீறி ஒரு திரைப்படம் 25 நாட்கள் 50 நாட்கள் அல்லது 75 முதல் 100 நாட்கள் ஓடுவது தற்பொழுது மிகப்பெரிய விஷயமாக இமாலய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்கள் 200 நாட்கள் அவ்வளவு ஏன் மூன்று வருடங்கள் கூட ஓடி இருக்கின்றன.

Advertisement

இக்கட்டுரையில் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடிய தமிழ் திரைப்படங்களை பற்றி நாம் பார்க்க போகிறோம்.

  1. ஹரிதாஸ் – மூன்று வருடங்கள்

1944ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஓடியது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா. ஆனால் இந்த திரைப்படம் 1944 முதல் 1946 ஆம் ஆண்டு வரை மூன்று வருடங்கள் திரையரங்கில் ஓடியது. மூன்று தீபாவளி நாட்களில் இந்த திரைப்படம் (1944 தீபாவளி முதல் 1946 தீபாவளி வரை) சென்னை சன் தியேட்டர்சில் ஓடி, யாருமே எட்ட முடியாத சாதனையை அப்பொழுது இந்த திரைப்படம் படைத்துவிட்டது.

Advertisement

எம்எஸ் தியாகராஜ பாகவதர் மற்றும் எம் எஸ் கிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வணிக ரீதியாக மட்டுமல்லாமல், அனைத்து காலகட்டத்திற்கும் ஏற்ற இந்தியாவின் 100 சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் இத்திரைப்படத்தை ஐபிஎன் லைவ் இணைத்தது குறிப்பிடத்தக்கது.

  1. சந்திரமுகி – 864 நாட்கள்

பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபு வடிவேலு மற்றும் நயன்தாரா ஜோதிகா என நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தனர். 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இத்திரைப்படம் உலகளவில் வெளியானது. பேய் கதையை கொண்ட திரைப்படமாக சந்திரமுகி இருந்தாலும், இதில் காமெடிக்கு எந்தவித பஞ்சமும் இருக்காது. சிறந்த குடும்ப படமாக இந்த திரைப்படம் இருந்ததால் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் அதாவது 864 நாட்கள் இத்திரைப்படம் திரையரங்கில் ஓடியது.

மக்கள் இத்திரைப்படத்தை இரண்டு மூன்று முறை திரையரங்குகளில் ரிப்பீட்டடாக பார்த்தார்கள். அந்த அளவுக்கு நேர்த்தியாகவும், சிறப்பாகவும் பாடல்கள்,காட்சி அமைப்புகள் என அனைத்து பிரிவிலும் இத்திரைப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கும். வணிகரீதியாக சக்கை போடு போட்ட இந்த திரைப்படம் விருதுகளும் வென்றது. இரண்டு பிலிம்பேர் விருதுகள் மற்றும் நான்கு தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருதுகள் வென்றது குறிப்பிடத்தக்கது.

3.கிழக்கே போகும் ரயில் – 450 நாட்கள்

1978ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் சுதாகர் மற்றும் ராதிகா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கிழக்கே போகும் ரயில். வணிக ரீதியாக எவ்வளவு வெற்றி பெற்றதோ அதே அளவு விமர்சனங்களிலும் இந்த படம் வெற்றி படமாகவே அமைந்தது. இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது. விகடனில் 100க்கு 55 மதிப்பெண்கள் இத்திரைப்படம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

  1. பயணங்கள் முடிவதில்லை – 437 நாட்கள்

சுந்தர்ராஜன் இயக்கத்தில் மோகன் மற்றும் பூர்ணிமா நடிப்பில் 1982ம் ஆண்டு இத்திரைப்படம் வெளியானது. மக்கள் மத்தியில் இத்திரைப்படம் வெளிவந்த ஒரு சில நாட்களில் நல்ல பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்க ஆரம்பித்தது. அப்பொழுது தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் இத்திரைப்படத்தை கண்டு வெகுவாகப் பாராட்டினார். விகடனில் இந்த திரைப்படம் 100 மதிப்பெண்களுக்கு 48 மதிப்பெண்கள் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக ஏ ஆத்தா மற்றும் இளைய நிலா பொழிகிறது பாடல் தற்போது வரை இளைஞர்கள் மத்தியில் கேட்கப்படும் பாடல்களாக உள்ளது. திரையரங்கில் ஒரு வருடத்திற்கு மேல் அதாவது 435 நாட்களில் திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது.

  1. கரகாட்டக்காரன் – 382 நாட்கள்

1989ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ராமராஜன் மற்றும் கனகா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஒரு வருடத்திற்கும் மேல் ஓடி சாதனை படைத்தது. கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் இணைந்து நடித்த 100வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதை கதை அமைப்பு காட்சிகள் எமோஷன் காமெடி மற்றும் பாடல்கள் என அனைத்து ஏரியாக்களிலும் இந்த படம் ஸ்கோர் செய்தது. இந்த திரைப்படம் தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருது விழாவில் இரண்டு விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

  1. ஒரு தலை ராகம்,கிழிஞ்சல்கள் மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே – 365 நாட்கள்

1980-ஆம் ஆண்டில் இ எம் இப்ராஹிம் இயக்கத்தில் டி ராஜேந்தர் இசையமைப்பில் ஷங்கர் மற்றும் ரூபா நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த திரைப்படம் ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் திரையரங்கில் ஓடியது குறிப்பிடத்தக்கது.

1981ஆம் ஆண்டு துரை இயக்கத்தில் டி ராஜேந்தர் இசையமைப்பில்,மோகன் மற்றும் பூர்ணிமா நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 365 நாட்கள் அதாவது ஒரு வருடம் ஓடியது.

அதே 1981 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில், சுகாசினி, மோகன் பிரதாப், சரத்பாபு மற்றும் பிரதாப் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இந்த திரைப்படம் மூன்று தேசிய விருதுகளையும் 3 தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருதுகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படமும் 365 நாட்கள் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

  1. சின்னத்தம்பி – 356 நாட்களுக்கு மேல்

1991 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் பிரபு மற்றும் குஷ்பூ நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சின்னத்தம்பி. இத்திரைப்படம் கதையமைப்பில் எந்த அளவு சிறப்பாக எடுக்கப்பட்டு இருக்குமோ அதே அளவு இளையராஜா தனது மேஜிக்கை இசை வடிவில் நமது செவிக்கு விருந்தளித்த்திருப்பார்.

இத்திரைப்படம் வெற்றியை கண்டு கன்னடா தெலுங்கு மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஒரு பிலிம்பேர் விருது மற்றும் 7 தமிழ்நாடு ஸ்டேட் விருதுகளை இத்திரைப்படம் வென்று குவித்தது குறிப்பிடத்தக்கது.

  1. மூன்றாம் பிறை மற்றும் பாஷா – 300 நாட்களுக்கு மேல்

இந்த இரண்டு திரைப்படங்களுக்கு மிகப் பெரிய அறிமுகம் தேவையில்லை. தற்பொழுது கூட நாம் அனைவரும் இத்திரைப்படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் போட்டு பார்க்கலாம் அந்த அளவுக்கு நேர்த்தியாக இந்த இரண்டு திரைப்படங்களும் எடுக்கப்பட்டிருக்கும். அதன் காரணமாகவே இந்த இரண்டு திரைப்படங்களும் திரையரங்கில் 300 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

1982ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மூன்றாம் பிறை. இத்திரைப்படத்தில் குறை என்று யாரும் எதுவும் கண்டுபிடித்துவிட முடியாது. திரைக்கதை பின்னணி இசை மற்றும் பாடல்கள் என அனைத்திலும் இந்தப் படம் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும். குறிப்பாக இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தற்போது பார்த்தால் கூட நம் அனைவரின் கண்களையும் குளமாக்கும்.விகடனில் திரைப்படம் 100க்கு 53 மதிப்பெண்கள் பெற்றுது. இரண்டு தேசிய விருதுகள் ஒரு பிலிம்பேர் விருது மற்றும் ஐந்து தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருதுகள் இத்திரைப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் மூன்றாம் பிறை கிளாஸ் என்றால் மறுபக்கம் பாஷா மாஸ். மாணிக் பாட்ஷா என்கிற பெயர் தற்போது கேட்டால் கூட நம் அனைவருக்கும் தேவா இசையமைத்த அந்த பிஜிஎம் தான் நம் மனதிற்குள் ஓடும். 1995ஆம் ஆண்டு சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த நடித்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்பொழுது தொலைக்காட்சியில் போட்டால் கூட சிறு குழந்தையிலிருந்து அனைவரும் விரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் இத்திரைப்படம் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும். தேவா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் தற்போது கூட நாம் அனைவரும் எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப கேட்கலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top