சினிமா

நடிகை சமந்தாவை தரக்குறைவாக பேசிய பிரபல பாடகி ? – இதுதான் காரணமா?

தென்னிந்திய சினிமாவில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த மாஸ்கோவின் காவேரி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இவர். இத்திரைப்படத்தை தொடர்ந்து பானா காத்தாடி விண்ணைத்தாண்டி வருவாயா நடுநிசி நாய்கள் பிருந்தாவனம்,நான் ஈ, கத்தி , தெறி,மெர்சல் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்திருப்பவர். தெலுங்கு சினிமாவின் டாப் ஸ்டார் ஆன நாகார்ஜுனாவின் மகன் நாகா ஜெய் தன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து தனது திரைப்படங்களிலும் உடற்பயிற்சிகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் இவருக்கு கடந்த வருடம் மையோசைட்டிஸ் என்ற நோய் தாக்கியது. இந்த நோயின் சிகிச்சைக்காக சில காலம் திரைப்படத் துறையிலிருந்து ஓய்வில் இருந்தார் சமந்தா. அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்த பின்னர் மீண்டும் படப்பிடிப்புகள் உடற்பயிற்சி பாக்சிங் என எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் உருவான சாகுந்தலம் என்ற காவிய திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் தற்போது நடித்து வருகிறார்.

Advertisement

பக்தி பாடல்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எல்ஆர் ஈஸ்வரி . இவரது அம்மன் பாடல்களை கேட்டு ரசிக்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு பக்தி பாடல்களுக்கு பெயர் பெற்றவர். பக்தி பாடல்கள் மட்டுமல்லாது யுவர் பாடிய பல திரைப்பட பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகியிருக்கின்றன. 1958 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படத்துறையில் பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். பழமொழிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருப்பவர் இவர்.

தற்போது இவர் நடிகை சமந்தாவை பற்றியும் அவரது பாடல் ஒன்றைப் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். இந்த கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்தக் கருத்துக்களுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்மறையான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. புஷ்பா படத்தில இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா என்ற பாடலைத் தான் பாடகி எல்ஆர் ஈஸ்வரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் .

Advertisement

இந்தப் பாடலை பற்றியும் இந்தப் பாடலை பாடிய பாடகி பற்றியும் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்திருக்கும் அவர் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை சமந்தாவையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இன்றைய நடிகைகளால் எப்படி இவ்வாறு நடனம் ஆட முடிகிறது ? எனக் கேள்வி எழுப்பி இருக்கும் அவர் அதெல்லாம் ஒரு நடனமா? என ஏளனமாக கேட்டிருக்கிறார். மேலும் அந்தப் பாடல் ஒரு கேவலமான பாடல் எனவும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் எல்.ஆர் ஈஸ்வரி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top