Monday, November 4, 2024
- Advertisement -
Homeசினிமாதர்பாரின் தோல்வியால் சோகத்தில் இருந்த ஏ ஆர் முருகதாஸுக்கு பாலிவுட்டில் வந்த வாய்ப்பு..!

தர்பாரின் தோல்வியால் சோகத்தில் இருந்த ஏ ஆர் முருகதாஸுக்கு பாலிவுட்டில் வந்த வாய்ப்பு..!

2001 ஆம் ஆண்டு தல அஜித்தின் நடிப்பில் தீனா திரைப்படம் தொடங்கி ரமணா கஜினி ஏழாம் அறிவு துப்பாக்கி போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

- Advertisement -

அதேபோல் இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது தமிழில் இவர் இயக்கிய கஜினி துப்பாக்கி போன்ற திரைப்படங்களை இவரே ஹிந்தியில் டப்பிங் செய்து இருக்கிறார் .

ஆனால் இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு தர்பார் திரைப்படத்தை தான் இயக்கியிருந்தார் அதற்குப் பிறகு சில ஆண்டுகள் எந்த திரைப்படங்களின் மீதும் அவர் ஆர்வம் காட்டவில்லை

- Advertisement -

இவர் தற்பொழுது  மீண்டும் திரைப்படங்களை இயக்க இருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். நடிகர் சிவகார்த்திகேயனின் 23 வது திரைப்படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

அதேபோல் பாலிவுட்டில் முற்றிலும் ஒரு ஆக்ஷன் திரைப்படத்தை இயக்குவதற்கு நடிகர் சல்மான் கான் இடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படம் வருகின்ற 2025 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் திரைப்படமும், சல்மான்கான் நடிப்பில் ஹிந்தி, திரைப்படமும், மேலும் இன்னும் ஒரு அனிமேஷன் திரைப்படமும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வரிசைப்படுத்தப்பட்டு இருப்பதாக X பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது

அதிலும் அந்த அனிமேஷன் திரைப்படம் ஏறத்தாழ படபிடிப்பு முடிந்து விட்டதாகவும் vfx மற்றும் படத்தொகுப்பு வேலைகள் மட்டும் இருப்பதாகவும் அது முடிந்தவுடன் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Most Popular