சினிமா

கமலின் நீண்ட நாள் கனவான ஆளவந்தான் 3Dயில் ரிலீஸ் ! படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

Kamal Haasan alavandhan

உலக நாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. விக்ரம் திரைப்படம் தந்த வெற்றி கமல்ஹாசனுக்கு பல கதவுகளை திறந்துள்ளது. தற்போது விக்ரம் மூலம் ஈட்டிய லாபத்தை மீண்டும் திரைப்படத்தில் முதலீடு செய்ய கமல்ஹாசன் விரும்புகிறார். தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் முதல்முறையாக தனது திரைப்படங்களில் அமல்படுத்தி அனைவருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் கமல்ஹாசன்.

தனது குருதிப்புனல் திரைப்படத்தில் முதல்முறையாக டிஜிட்டல் டிடிஎஸ் சவுண்டை அறிமுகப்படுத்தினார். இதேபோன்று அடோப், FCP போன்ற படத்தொகுப்பு சாப்ட்வேர்களை முதல் முறையாக தமிழ் சினிமாவில் அமல்படுத்தியவரும் கமல்தான். திரைக்கதையை எழுத பயன்படுத்தப்படும் மேஜிக் பிரேம் சாஃப்ட்வேரையும் மகாநதி படம் மூலம் கமல்ஹாசன் தான் முதல்முறையாக பயன்படுத்தினார் . இப்படி அனைத்திலும் முன்னோடியாக இருந்த கமல்ஹாசன் 2001 ஆம் ஆண்டு வெளியான ஆளவந்தான் திரைப்படத்தில் மோஷன் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை இந்திய சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.

கமல்ஹாசனின் கனவு படங்களில் ஒன்றான ஆளவந்தான் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.எனினும் படத்தின் பட்ஜெட் அதிகமாக சென்றதால் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவுக்கு படம் போதிய வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு நீண்ட காலமாக ஒரு கனவு இருந்தது.அதாவது 3டி படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசைதான் அது. இதற்காக அப்போது பல முயற்சியை கமல் எடுத்தாலும், அது கைகூடவில்லை. இந்த நிலையில் பல்வேறு கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த ரசிகர்களால் போற்றப்படும் ஆளவந்தான் திரைப்படத்தை 3டியில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆளவந்தான் திரைப்படத்தை டிஜிட்டல் ரீ மாஸ்டரிங் செய்து அதனை 3டி ஆக மாற்றி வரும் நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்த நாளை ஒட்டி ரிலீஸ் ஆக உள்ளது.
கமல்ஹாசன் மாறுபட்ட இரட்டை வேடங்களில் நடித்த இந்த திரைப்படத்தில் ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர். பல ரசிகர்களுக்கு பேவரைட் படமாக விளங்கி வரும் ஆளவந்தானை 3d பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top