Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினியை முந்திய கமல்..வசூலில் ஆளவந்தான் முன்னிலை

ரஜினியை முந்திய கமல்..வசூலில் ஆளவந்தான் முன்னிலை

18 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரஜினி திரைப்படமும் கமலஹாசன் திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஆனால் இது புதிய திரைப்படம் கிடையாது. ஏற்கனவே வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற முத்து திரைப்படமும் பெரும் பொருள் செலவில் எடுக்கப்பட்ட ஆளவந்தான் திரைப்படமும் கடந்த டிசம்பர் எட்டாம் தேதி உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் ரிலீசானது.

- Advertisement -

இதில் முத்து திரைப்படம் புதிய தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு எந்த காட்சிகளும் நீக்கப்படாமல் ரிலீஸ் ஆனது. ஆனால் ஆளவந்தான் திரைப்படம் தற்போது உள்ள ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய அளவில் படம் காட்சிகள் மாற்றப்பட்டது.

சுமார் ஒரு மணி நேர காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் ஆளவந்தான் திரைப்படத்தை அப்போது உள்ள ரசிகர்கள் படம் குறித்து புரியாமல் அதனை பெரிய அளவில் கொண்டாட வில்லை. ஆனால் தற்போது ஆளவந்தான் திரைப்படம் கமல்ஹாசனின் திரைப்பட புரட்சியாக பாவித்து வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் முத்து திரைப்படத்தை விட ஆளவந்தான் திரைப்படம் அதிக வசூலை பெற்றிருக்கிறது. மேலும் முத்து திரைப்படம் போதிய கூட்டம் இல்லாததால் சில திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

இதற்கு காரணம் முத்து திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. மேலும் அமேசான் போன்ற ஓடிடி தலங்களில் முத்து திரைப்படம் இருக்கிறது. ஆனால் ஆளவந்தான் திரைப்படம் இதுவரை எந்த ஒரு ஓடிடிதளத்திலும் இல்லை.

சன் டிவியும் அதனை ஒளிபரப்புவது இல்லை என்பதால் ஆளவந்தான் திரைப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு எழுந்தது. இன்று இரண்டாவது நாளும் ஆளவந்தான் திரைப்படத்திற்கு கூட்டம் அதிகரித்து இருக்கிறது. இது கமல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Most Popular