Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமா4ஆம் வகுப்பு படிக்கும் போதே கார் ஓட்டுவேன்.. 1000 கிமீ கூட நிறுத்தாமல் வண்டி ஓட்டுவேன்.....

4ஆம் வகுப்பு படிக்கும் போதே கார் ஓட்டுவேன்.. 1000 கிமீ கூட நிறுத்தாமல் வண்டி ஓட்டுவேன்.. வாயால் வட சூட்டு சிக்கிய அபிசேக் ராஜா

வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டாக இருப்பவர் தொகுப்பாளர் அபிஷேக் ராஜா. அபிஷேக் ராஜா ஒரு பேட்டி எடுத்தால் மறுநாளே மீம் கிரியேட்டிஸ்களுக்கு கன்டென்ட் ஆகிவிடுவார்.

- Advertisement -

எப்போதும் ஒரு அதீத புத்திசாலி போல் பேசி நிறைய பிரபலங்களிடம் மொக்கை வாங்கி இருக்கிறார். ஒரு கேள்வியை எளிதாக கேட்காமல் அதில் 1008 ஆங்கில வார்த்தை போட்டு என்ன கேட்கிறோம் என்று தெரியாத அளவுக்கு ஒரு கேள்வியை வந்திருக்கும் பிரபலத்துடன் கேட்பார்.

ஒருமுறை மணிரத்தினத்திடம் தளபதி படத்தை கேரளாவில் ஒரு கிளைமாக்ஸ் தமிழ்நாட்டில் ஒரு கிளைமாக்ஸ்சும் அந்த காலத்தில் எப்படி யோசித்தீர்கள் என கேட்டதற்கு இதெல்லாம் சுத்த பொய் இது கூட தெரியாமையா கேள்வி கேக்குறீங்க அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவே இல்லை என மணிரத்தினம் மொக்கை கொடுத்திருக்கும் சம்பவம் அரங்கேறியது.

- Advertisement -

இந்த நிலையில் அபிஷேக் ராஜா ஒரு பேட்டியில் பங்கேற்று இருக்கிறார். அதில் தாம் நான்காம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே கார் ஓட்டி பழகி இருப்பதாகவும் இது சட்டத்திற்கு எதிரானது என்றாலும் எனக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

வெயில் மழை புயல் எதையுமே பார்க்காமல் வண்டியை எடுத்தால் நிறுத்தாமல் ஆயிரம் கிலோமீட்டரை ஓட்டுவேன் என்று அபிஷேக் ராஜா கூறியிருக்கிறார். தன் தந்தை அருகில் இருக்கும்போது அசதியில் உறங்கினால் தான் காரை எடுத்து விட்டு நேராக செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு நிறுத்தி விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

தம் கார் ஓட்டும்போது தூங்க மாட்டேன் என்றும் அப்படி லேசாக கண் அசைந்தால் தனது தந்தை  தம்மை சுண்டி விடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பேட்டி தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்திருக்கிறது.

நான்காம் வகுப்பு படிக்கும் போது காலே பிரேக்கிற்கு எட்டாத நிலையில் இருக்கும் ஆனால் நீ எப்படி ஆயிரம் கிலோ மீட்டர் வரை ஓட்டினாய் என்று பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். ஒரு மனுஷன் பொய் பேசலாம் இப்படி ஏக்கர் கணக்கில் போய் பேசுவதா என்றும் அவர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Most Popular