சினிமா

தைராய்டின் காரணமாக ஆளே மாறி இருக்கார்” “கேப்டன் விஜயகாந்தின் 33வது திருமண நாளில் அவரை சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட எஸ.ஏ.சந்திரசேகர்”!-

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். தனது நடிப்பு வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து பின்னர் தன்னுடைய கடின உழைப்பினால் உயர்ந்து நடிகர் சங்க தலைவராகவும் பதவி வகித்தவர்.

இவர் நடிப்பில் உருவான செந்தூரப்பாண்டி கேப்டன் பிரபாகரன் சேதுபதி ஐபிஎஸ் நெறஞ்ச மனசு புலன் விசாரணை மற்றும் வல்லரசு போன்ற பல திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டவை . ஒரு சிறந்த நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதராகவும் இருக்கின்றவர் கேப்டன் விஜயகாந்த் . முதன் முதலில் சினிமா சூட்டிங்களில் அசைவ உணவு வழங்கும் முறையை கொண்டு வந்தவர் இவர்தான் .

Advertisement

மேலும் சினிமாவில் வாய்ப்பு தேடி வருகின்றவர்களுக்காக தன்னுடைய அலுவலகத்திலேயே உணவு ஏற்பாடு செய்ததும் விஜயகாந்த் தான். இது தவிர நடிகர்களுக்கு ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார் . இவர் நடிகர் சங்கத் தலைவராக இருந்த காலகட்டங்களில் அதன் முன்னேற்றத்திற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தியவர் .

சினிமாவில் இருந்து கொண்டே தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து தன்னுடைய கடின உழைப்பினால் தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தவர் . சில காலங்களுக்கு முன்பு தைராய்டு பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்ட இவர் தற்போது சினிமா மற்றும் அரசியல் வாழ்வில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்கிறார் .

Advertisement

தன்னுடைய தைராய்டு பிரச்சனை காரணமாக அமெரிக்கா சென்று மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த விஜயகாந்த் அதிலிருந்து நன்றாக குணமடைந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து வந்தன .

இந்நிலையில் தனது 33 வது திருமண நாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தார் கேப்டன் விஜயகாந்த் . மேலும் இந்த நிகழ்வில் விஜயகாந்தை வைத்து சட்டம் ஒரு இருட்டறை செந்தூரப்பாண்டி வசந்த ராகம் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தவர் எஸ் ஏ சந்திரசேகர் . இவர் கேப்டனின் மிக நெருங்கிய நண்பரும் ஆவார். இவர் கேப்டன் இல்லம் சென்று அவரை சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் .

இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை நெகிழச் செய்திருக்கின்றன. தைராய்டு நோயின் சிகிச்சை காரணமாக இந்தப் புகைப்படங்களில் விஜயகாந்த் மிகவும் மெலிந்து ஒல்லியாக காணப்படுகிறார் . ஆனாலும் நன்றாக ஆரோக்கியத்துடன் இருக்கிறார் . விரைவிலேயே கேப்டன் இந்த நோயிலிருந்து மீண்டு வருவார் என நம்பிக்கையுடன் தெரிவித்து இருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top