Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஏஆர் ரஹ்மான் மீது எந்த தவறும் இல்லை.. எங்களுடைய தவறு தான்.. விழா அமைப்பாளர்கள் கருத்து

ஏஆர் ரஹ்மான் மீது எந்த தவறும் இல்லை.. எங்களுடைய தவறு தான்.. விழா அமைப்பாளர்கள் கருத்து

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடத்தப்பட்ட மறக்குமா நெஞ்சம் என்ற ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி பல ரசிகர்களுக்கு மறக்க முடியாத பல இன்னல்களை கொடுத்து விட்டது.

- Advertisement -

ஏ சி டி சி என்ற நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்பாடு வேலைகளை செய்து இருந்தது. ஏ ஆர் ரகுமான் பாடல்கள் மட்டும் கவனம் செலுத்தி இந்த பணியை மேற்கொண்டார். ஆனால் இந்த நிறுவனம் பல்வேறு குளறும்படிகளை  செய்திருக்கிறது.

நிகழ்ச்சிக்கு 20000 பேர் தான் வருவார்கள் என்று போலீசாரிடம் அனுமதி வாங்கிய இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 45 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்று இருக்கிறது. இதனால் டிக்கெட் இருந்தும் உள்ளே செல்ல முடியாமல் ரசிகர்கள் பாதியிலே வெளியே வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதனால் பலரும் ஏ ஆர் ரகுமானை கடுமையாக திட்டி வரும் நிலையில் தற்போது அவருக்கு ஆதரவாக பல திரைப்பட நடிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள ஏ சி டி சி நிறுவனம் ரசிகர்களிடையே மன்னிப்பு கேட்டுள்ளது.

- Advertisement -

நடந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் நாங்கள் தான் காரணம் என்றும், இதற்கும் ஏ ஆர் ரகுமானுக்கு துளி கூட தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளது. தாங்கள் இவ்வளவு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை என்றும், சிலர் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு வந்ததால்தான் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் கூறியுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்களும் உங்களுடைய டிக்கெட் நகலை இமெயிலில் அனுப்பினால் அதற்கான தொகையை முழுமையாக திருப்பி தர தங்களுடைய நிறுவனம் தயாராக இருப்பதாக கூறியுள்ளது.
இதன் அடிப்படையில் சுமார் 4000 பேர் தற்போது ஈமெயில் அனுப்பி இருக்கிறார்கள். இதில் 400 பேர்களுக்கு வரை பணம் திருப்பி தரப்பட்டு இருக்கிறது.

Most Popular