Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற வைத்த அர்ஜூன் பேட்டி.. பிளாக்பஸ்டர் உறுதி

விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற வைத்த அர்ஜூன் பேட்டி.. பிளாக்பஸ்டர் உறுதி

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்ஸ்கள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வந்து கொண்டு தான் இருக்கிறது.  சில நாட்கள் ஆக லியோ திரைப்படத்திற்காக படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டு வருகிறது.

காஷ்மீருக்கு படப்பிடிப்பின் காரணமாக லியோ பட குழுவினர்கள் சென்று இருக்கிறார்கள்.
அதேபோல் இந்த திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து திரிஷா ,பிரியாஆனந்த் ஆக்சன் கிங் அர்ஜுன் போன்ற பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஆக்சன் கிங் அர்ஜுன் இந்த திரைப்படத்தைப் பற்றிய தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
நான் இதுவரை தளபதி விஜய் உடன் நடித்தது இல்லை. இந்த திரைப்படமே ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது. அதிலும் என்னுடைய கதாபாத்திரமும் வித்தியாசமானது தான் .இதுவரை நான் நடித்த திரைப்படங்களிலேயே நடித்திடத ஒரு கதாபாத்திரத்தை இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஆக்சன் கிங் அர்ஜுன்.

- Advertisement -

இதைக் கேட்கும் பொழுது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகிறது. லியோ திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது தான் என்பது அவர்கள் வெளியிட்ட டீசரிலேயே ரசிகர்கள் கண்டுபிடித்து இருப்பார்கள்.
அதேபோல் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்தத் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வந்திருக்கிறது .ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் இதே அப்டேட்ஸ்களை நாளுக்கு நாள் தளபதி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்

Most Popular