தமிழ் சினிமாவில் அரவிந்த்சாமிக்கு பிறகு சாக்லேட் ஹீரோவாக பெண்களின் மனதை கொள்ளை கொண்டவர் என்றால் அது அப்பாஸ் தான். அவர் நடித்த முதல் படமான காதல் தேசமே மிகப்பெரிய ஹிட் பெற்று அவரை இரவில் டாப் ஹீரோவாக ஆக்கியது.
எனினும் அதன் பிறகு பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அது பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. இதனை தொடர்ந்து பம்மல் கே சம்பந்தம், ஆனந்தம், மின்னலே, பூவேலி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் இரண்டாம் நிலை ஹீரோவாக நடித்து பெயர் பெற்றார்.
இதனை அடுத்து சினிமாவில் பங்கேற்காமல் இருந்த நடிகர் அப்பாஸ் திடீரென்று ஹார்பிக் விளம்பரத்தில் நடிக்க தொடங்கி ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கினார். இதன் பிறகு சினிமாவை விட்டு முற்றிலும் விலகிய அப்பாஸ் நியூசிலாந்தில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொடுத்த அப்பாஸ் தமக்கு உடல் நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் நான் நன்றாக இருக்கிறேன் என்றும் நியூசிலாந்தில் பணிபுரிந்து வந்தேன் என்றும் கூறினார்.
மேலும் ரசிகர்களுக்கு பல நல்ல விஷயங்களை இணையதளம் மூலம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ள நடிகர் அப்பாஸ் ரசிகர்கள் யாரும் தற்கொலைக்கு முயலவே கூடாது என்று கூறியுள்ளார்.
தம் சிறுவயதில் இருக்கும் போது ஒரு பெண்ணை காதலித்ததாகவும் ஆனால் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் போய்விட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்ய முயன்றேன் என்று கூறியுள்ளார்.
அப்போது ஹைவே ஒன்றில் பெரிய லாரிக்காக நான் காத்திருந்தேன்.
அப்போது ஒரு லாரி வந்தது.அதில் குதித்து விடலாம் என்று தயாராக இருந்தேன்.ஆனால் பின்னால் ஒரு இருசக்கர வாகனம் வந்தது. இந்த தருணத்தில் நாம் குதித்தால் பின்னால் வரும் இருசக்கர வாகனத்தில் வருபவருக்கும் அடிப்படும் என நான் குதிக்கவில்லை.
அதன் பிறகு தான் யோசித்தேன். மற்றவர்கள் நலனை பார்க்கும் நாம் ஏன் சாக வேண்டும். மற்றவர்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நாம் இனி பணியாற்றலாமே என்று தற்கொலை முடிவை கைவிட்டேன். நான் சினிமாவுக்கு வரும்போது மாடலிங் துறையில் இருந்தவன்.
இதனால் ஒரு மாடலாக தான் நான் ஹார்பிக் விளம்பரத்தில் நடித்தேன். அதில் எனக்கு எந்த பிரச்சினையுமே இருந்ததில்லை.ரசிகர்கள் பலரும் என்னை என்ன சார் பாத்ரூம் கிளீன் பண்ணியாச்சா என கிண்டல் பண்ணுவார்கள். நான் உடனே சுத்தமாக இருப்பது அவசியம் தானே இதில் என்ன தவறு இருக்கிறது என்று பதில் சொல்வேன் என அப்பாஸ் கூறியுள்ளார்.