சினிமா

ரசிகர்களுக்கு திடீர் வேண்டுகோள் விடுத்த அஜித்.. என்ன ஆச்சு?

Ajith in airport

மனிதர்களைப் பொறுத்தவரை தான் ஒரு பதவியை அடைந்து விட்டால் அதற்கு காரணமானவர்களையோ இல்லை தனக்கு கீழ் இருப்பவர்களையோ பற்றி சற்றும் கவலை இல்லாமல் இருப்பார்கள். இந்த இடத்திற்கு வந்ததற்கு தான் மட்டுமே காரணம் என்ற தலைக்கனத்தோடு நகர்ந்து செல்வார்கள். அப்படிப்பட்ட இயல்பு ஒரு சாதாரண தொழிலாளிக்கு கூட இருக்கும். ஏனெனில் இது ஒரு சுயநல பூமி.

இப்படிப்பட்ட பூமியிலும் இன்னும் பல நல்ல எண்ணங்களைக் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகளும் இருக்கிறது
அதில் ஒருவர் தான் நடிகர் அஜித். தமிழ் சினிமாவை பொறுத்தவரை முன்னணி நடிகர்களில் ஒருவரானவர் நடிகர் அஜித், இவருடைய ரசிகர்கள் இவரை தல என்று பட்டம் கொடுத்து ரசித்து வருகிறார்கள். பொதுவாக தலை என்றால் எல்லாவற்றிலும் சிறந்தது என்பதே பொருளாகும் அதற்கு தகுதியானவர் நடிகர் அஜித்.

இவர் பொதுவாகவே தன்னுடைய ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர். அதைப்போல் தான் ஒரு நல்ல நடிகனாக இருப்பதற்கு உறுதுணையாக இருப்பது தன்னுடைய ரசிகர்கள் தான் என்பதையும் உணர்ந்து அவர்களுடைய நலனிலும் அக்கறை கொண்டவர்.அதனால் அவர் பொதுவாகவே ரசிகர்களுக்கு பல அறிவுரைகளை கூறி வருவார்.அதே போல் தற்பொழுது தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு அறிவுரையை கூறியிருக்கிறார்.

ரிங்கிங் இன் இயர் என்று சொல்லப்படும் ஒரு காது சம்பந்தப்பட்ட நோயை பற்றி பேசிய நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர்களை உங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.. எப்போதும் அன்புடன் என்று கூறியிருந்ததாக நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

தம் மீது அக்கறை கொண்ட தன்னுடைய ரசிகர்களின் மீது அக்கறை கொண்டவர் நடிகர் அஜித், இவர் ஒரு நல்ல நடிகன் மட்டுமல்ல ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் அஜித் தற்பொழுது ஏகே 61 என்ற திரைப்படத்தை நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே வலிமை மற்றும் மேற்கொண்ட பார்வை என்று இரண்டு படங்கள் நடிகர் அஜித்தை வைத்து இயக்கி அதை வெற்றி பெற செய்தவர். இதனால் நிச்சயம் ஏகே 61 என்ற திரைப்படமும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் கொண்டதாக இருக்கிறது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top