Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகர் அஜித்குமாருக்கு எஸ்.எஸ் சக்கரவர்த்தி உடல்நிலை பற்றி தெரிந்திருந்தால் நிச்சயம் உதவி செய்திருப்பார் - வலைப்பேச்சு...

நடிகர் அஜித்குமாருக்கு எஸ்.எஸ் சக்கரவர்த்தி உடல்நிலை பற்றி தெரிந்திருந்தால் நிச்சயம் உதவி செய்திருப்பார் – வலைப்பேச்சு அந்தணன் பேட்டி

தமிழ் உலகில் பிரபல தயாரிப்பாளரான எஸ்.எஸ். சக்கரவர்த்தி புற்று நோய் காரணமாக,எட்டு மாத சிகிச்சைகளுக்கு பின்பு இன்று இயற்கை எய்தினார். இவர் நடிகர் அஜித்குமாருக்கு அதிகமான திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் மற்றும் சக்கரவர்த்திக்கு இடையே இருந்த பிரச்சனையை வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

- Advertisement -

தயாரிப்பாளர் சக்கரவர்த்தி மற்றும் நடிகர் நடிகர் அஜித்குமாருக்கு இடையேயான தொடர்பை பற்றி அந்தனன் கூறும்போது “அஜித்தை வைத்து நிறைய படம் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி செய்து இருக்கிறார். இரண்டு பேரும் ஆரம்பத்தில் இருந்து நெருங்கிய நண்பர்கள். அஜித் மற்றும் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தோல்வியை சந்தித்த சமயத்தில் நண்பர்களாக மாறி அடுத்தடுத்த படங்களில் கூட்டணி அமைத்து கொண்டனர்.
அவர்களின் கூட்டணி படங்களில் நிறைய வெற்றி படங்கள் இருக்கிறது. உதரணத்திற்கு வாலி, வில்லன், முகவரி, வரலாறு ஹிட்டனது.அஜித், சக்கரவர்த்தி இடையே பிரச்னை இருப்பது உண்மை தான். அதற்கு நிறைய காரணம் சொல்லப்பட்டது. அதில் ஒன்று, அஜித் தன் நண்பர் என்ற நம்பிக்கையின் பேரில் நிறைய செக்கில் கையெழுத்து போட்டு சக்கரவர்த்தியிடம் கொடுத்து இருக்கிறார்” என்று பேசி இருந்தார்.

மேலும் அவர் கூறும் போது”சக்கரவர்த்தி நிறைய இடங்களில் பைன்னஸ் வாங்கி வேறு விதமாக பயன்படுத்தி கொண்டார். அதனால் தான் அஜித் வருத்தப்பட்டு அவரை விட்டு விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இது அப்போதைய காலக்கட்டத்தில் பரவலாக பேசினார்கள்.ஆனால் நான் ஒரு முறை சக்கரவர்த்தியிடம் அஜித் பற்றி பேசினேன். அப்போது அவர், தான் அஜித் படத்தை மட்டும் தான் எடுக்கிறேன் என சொல்கிறார்கள்? ஆனால் உண்மையில் அந்த நேரத்தில் அவர் மார்க்கெட் எப்படி இருந்ததோ அதற்கு ஏற்ற சம்பளத்தை கொடுத்து தான் படம் எடுத்தேன்.அவர் இது போன்று சொன்ன பிறகு அஜித்தை பயன்படுத்தி கொண்டு சக்கரவர்த்தி பணத்தை எடுத்து கொண்டார் என பேசப்பட்ட விஷயத்திற்கான அடிப்படை முகாந்திரமே இல்லையே என நினைத்தேன்” என்று கூறினார்.

- Advertisement -

மருத்துவமனைக்கு சென்று தயாரிப்பாளரை அஜித்குமார் ஏன் பார்க்கவில்லை என்ற கேள்விக்கு “எஸ்.எஸ்.சக்கரவர்த்திக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் கூட காசு பிர்சனை இல்லை. அவர் பிரபலங்களிடம் உதவி கேட்க வேண்டிய அவசியம் தேவைப்படவில்லை.அஜித் சமூக வலைதளங்கள் தொடர்பு அனைத்தையும் விட்டு விலகி இருக்கிறார். அவரிடம் ஒரு தகவலை கொண்டு சேர்த்தால் மட்டுமே அதை தெரிந்து கொள்ள கூடிய சூழல் இருக்கிறது. அவருக்கு சக்கரவர்த்தி பற்றி தெரிந்து இருந்தால் உதவி செய்து இருப்பார்” என்று பதிலளித்திருந்தார்.

- Advertisement -

நடிகர் அஜித்குமார், புற்றுநோய்க்காக எட்டு மாதங்கள் சிகிச்சை எடுத்த தயாரிப்பாளர் எஸ். எஸ்.சக்கரவர்த்தியை ஒரு முறை நேரில் சென்று பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular