Wednesday, May 15, 2024
- Advertisement -
Homeசினிமாஇனி சினிமா பார்ட் டைம் தான்.. விடாமுயற்சியில் அஜித் செய்யும் புது முயற்சி

இனி சினிமா பார்ட் டைம் தான்.. விடாமுயற்சியில் அஜித் செய்யும் புது முயற்சி

நடிகர் அஜித்குமாரின் 62 வது படமான விடாமுயற்சியின் படப்பிடிப்பு ஒருவழியாக ஆகஸ்ட் 17 அன்று ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.
இதற்காக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தளங்களை வேறு வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார்கள்.

- Advertisement -

தல அஜித்தின் பிறந்தநாள் அன்று ஏகே 62 வின் தலைப்பாக விடாமுயற்சி என்ற பெயரை அறிவித்து ரசிகர்கள் மத்தியில் இரட்டிப்பு மகிழ்ச்சியை படக்குழு ஏற்படுத்தியது.ஆனால் இன்றளவும் படப்பிடிப்பு ஏதும் தொடங்காமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மற்ற நடிகர்களின் படங்கள் துரிதமாக தயாராகி வரும் நிலையில் நம் தலயின் ரசிகர்களோ ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தனர்.ஏகே 62 திரைப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். பின்பு  திரைக்கதையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் இப்படத்தில் இருந்து நீங்கினார்.

- Advertisement -

அதன் பிறகு நடிகர் அருண் விஜய் நடித்த தடம் தடையறத் தாக்க ஆர்யா நடித்த மீகாமன் உதயநிதி ஸ்டாலின் நடித்த  கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குனராக மாறினார்.
அஜித் குமார் மகிழ் திருமேனியிடம் திரைக்கதையில் நீங்கள் முழு திருப்தி பெற்றவுடன் நாம் படத்தை தொடங்கலாம் இன்று முழு சுதந்திரம் கொடுத்து இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அந்த இடைவெளியை உடற்பயிற்சி செய்து வெகுவாக தன் உடல் எடையை குறைத்தும் இருக்கிறார் அஜித்குமார்.ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு மூன்றே பகுதிகளாக படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாம் பட குழு.

- Advertisement -

அதிலும் அஜித்தின் காட்சிகள் முதலில் படமாக்கப்பட இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.
படத்தின் காட்சிகளை துரிதமாக முடித்துக் கொடுத்து  விட்டு வேர்ல்ட் பைக் ரைட் நம்ம தல செல்ல இருப்பதாகவும்  தகவல்.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத்தின் இசையில் அஜித்தின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி பெற போவதில் எந்த சந்தேகமும் இல்லை.

தல என்றோ அஜித் குமார் என்றோ பெயர் ஒலித்தாலே அரங்கையே அலறவிடும் ரசிகர்களுக்கு இச்செய்தி  பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் மென்மேலும் அதைப் பற்றிய ஆவலையும் தூண்டியுள்ளது.

Most Popular