Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாமனைவி ஷாலினிக்கு பல கோடிகள் செலவிட்டு சர்ப்ரைஸ் பரிசு கொடுத்துள்ள அஜித்குமார்.. !

மனைவி ஷாலினிக்கு பல கோடிகள் செலவிட்டு சர்ப்ரைஸ் பரிசு கொடுத்துள்ள அஜித்குமார்.. !

அல்டிமேட் ஸ்டார் மற்றும் கோலிவுட்டின் தல அஜித்குமார் கடந்த சில வருடங்களாக சினிமாவுக்கு ஈடாக தன் சொந்த வாழ்க்கையும் பார்த்து வருகிறார். இரண்டாவது பிறவி எடுத்தது போல உணர்கிறோம். உலக சுற்றுதல் பயணத்தில் முதல் பாகத்தை முடித்துள்ளார். இடையே தான் அவர் படங்கள் செய்து வருகிறார்.

- Advertisement -

கடந்த பொங்கலில் 8 ஆண்டுகளுக்குப் பின் தன் போட்டியாளர் விஜய்யுடன் மோதினார். இதில் அஜித்தின் துணிவு திரைப்படம் விஜய்யின் வாரிசை வென்றது (விமர்சன ரீதியாக). இதன் பிறகு அஜித் உடனே விக்னேஷ் சிவனுடன் படம் செய்வதாக இருந்தது ஆனால் ஸ்கிரிப்ட் சிக்கலால் அது கைவிடப்பட்டு மாற்று இயக்குனர் வந்தார்.

அதே லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி தலைமையில் அஜித் 62 ‘ விடாமுயற்சி ’ உறுதியாகியுள்ளது. ஆனால் படத்தின் அறிவிப்பு தவிர வேறு எதுவும் இதுவரை ரசிகர்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் விடாமுயற்சி நடக்காது என்றெல்லாம் வதந்திகள் பரவின. அண்மையில் சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளார் சுபாஸ்கரன் வதந்திகளுக்கு முற்று்புள்ளி வைத்தார்.

- Advertisement -

விடாமுயற்சி திரைப்படம் இந்த மாதம் இறுதியில் நிச்சயம் துவங்கப்படும் என செய்திகள் வந்துள்ளன. அஜித் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து நடிக்கவிருக்கிறார். படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் துபாயில் நடக்கிறது. இதற்காக அஜித்குமார் சூப்பரான ஓர் செயலை செய்திருக்கிறார். இது மனைவி ஷாலினிக்கும் மிகுந்த சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

- Advertisement -

துபாயில் நடத்தப்படும் ஷூட்டிங்க்கு அஜித்குமார் தன் வீட்டில் இருந்தே செல்ல முடிவுசெய்து பல கோடிகள் செலவுவிட்டு ஓர் பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ளார். இது தன் மனைவி ஷாலினிக்கு பெரிய சர்ப்ரைஸ். இத்தகு செயல்கள் தியேட்டரைத் தாண்டியும் அஜித்தை ரசிக்க வைக்கிறது.

Most Popular