Wednesday, May 1, 2024
- Advertisement -
Homeசினிமாஎன் இவ்வளவு விரக்தியா பேசுறாரு?நம்ம ஹெரால்ட் தாஸ் அர்ஜூன்

என் இவ்வளவு விரக்தியா பேசுறாரு?நம்ம ஹெரால்ட் தாஸ் அர்ஜூன்


அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படுவதில் முதல்வன் அர்ஜுன் .கதாநாயகன் என்றாலும் , வில்லன் என்றாலும்கூட, கச்சிதமாக பொருந்தி போகும் சிறப்பு ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு உண்டு.ஜென்டில்மேன், ஜெய் ஹிந்த் ,முதல்வன் போன்ற படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் முத்திரை பதித்தவர் அர்ஜுன்.

- Advertisement -

அவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பதில் அளிக்கையில்; தனக்கு தனது படங்களின் விமர்சனங்கள் பலவிதமாக இருந்தாலும்கூட, மக்கள் மனதில் நல்ல மனிதர் என்ற பெயர் மட்டும் போதும் என்று கூறியுள்ளார்!!

- Advertisement -

சினிமாவில் நடிப்பதை கடவுள் தமக்கு கொடுத்த பரிசாக தான் பார்க்கிறேன் .என்னை பொறுத்தவரை சினிமாவில் நான் நல்ல பேர் எடுக்க வேண்டும்.சமுதாயத்தின் எனக்கென ஒரு நல்ல பிம்பம் உருவாக வேண்டும்.

- Advertisement -

பல படங்கள் வெற்றியடைந்து இருக்கிறது சில படங்கள் தோல்வியை தழுவி இருக்கிறது. அதுபோல் பல பேர் என்னை ரசிக்கிறார்கள் சில பேர் என்னை பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்கள்.


இருந்த போதும் கண்ணாடி முன் நின்று என்னை பார்க்கும் பொழுது , எனக்குள் நான் திருப்தி கொள்கிறேன். அது மட்டுமில்லாமல் நாற்றுப்பற்றாளனாக என்னை மக்கள் நினைக்கிறார்கள். வயதானவர்கள் சிலர் என்னை காணும் பொழுது “அர்ஜுன் ஜெய் ஹிந்த்” என்று கூறி கையை உயர்த்தும்போது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது!!


சினிமாவில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்றாலும் கூட சி அவனா என்று யாரும் சொல்லாத வண்ணம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அர்ஜுன் கூறியுள்ளார்.

குறிப்பாக அர்ஜுன் படங்கள் என்றால் இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெறாது. மேலும் குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கும் !எந்த விதத்திலும் முகம் சுளிக்க வைக்காமல் இருக்கும் !என்று நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.. இரட்டை அர்த்த வசனங்கள் பேச வேண்டி பலமுறை இயக்குனர்கள் நிர்பந்தித்தும் நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை

என்று கூறியுள்ளார் ஜென்டில்மேன் அர்ஜுன்..அவரின் அடுத்த அதிரடி என்ட்ரியான தளபதி விஜயின் லியோ படத்திற்காக மரண வெயிட்டிங்கில் இருக்கிறார்கள் ரசிகர்கள்!!

டேய் கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா கண்ணா என் மேல கட்டெறும்பு போன்ற பாடல்கள் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பாகாது!

Most Popular