Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஇயக்குனர் மகிழ் திருமேனி இப்படிப்பட்டவரா? இதனால்தான் விடாமுயற்சியின் நடிக்கவில்லை.. மனம் திறந்த அருண் விஜய்...!

இயக்குனர் மகிழ் திருமேனி இப்படிப்பட்டவரா? இதனால்தான் விடாமுயற்சியின் நடிக்கவில்லை.. மனம் திறந்த அருண் விஜய்…!

- Advertisement -

- Advertisement -

தல அஜித்திற்கு துணிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது இந்த நிலையில் இவருடைய அடுத்த திரைப்படமான விடாமுயற்சி மீது ரசிகர்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

அந்த நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதமாக தற்பொழுது நடிகர் அருண் விஜய் இயக்குனர் மகிழ்திருமேனி பற்றி ஒரு சில செய்திகளை கூறியிருக்கிறார்.

இதற்கு முன்பு இயக்குனர் மகிழ் திருமேனி தடையறத் தாக்க, மீகாமன் ,தடம்,கழகத் தலைவன் ஆகிய திரைப்படங்கள் தான் இவர் இயக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் தடையறத் தாக்க மற்றும் தடம் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே நடிகர் அருண் விஜயை கதாநாயகனாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படங்கள் ஆகும். அதனால் நடிகர் அருண் விஜய்க்கு இயக்குனர் மகிழ் திருமேனியுடன் பணியாற்றிய அனுபவம் அதிகம்.

இயக்குனர் மகிழ்திருமேனி கதை எழுதும் பொழுது எந்தவிதமான இடையூறுகளும் இருக்கக் கூடாது என்று தன்னுடைய அலைபேசியை கூட ஆப் செய்து விடுவார். அந்த அளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய இயக்குனர் என்று கூறியிருந்தார் நடிகர் அருண் விஜய்.

தனக்கு ஒரு கதாநாயகனை பிடித்து விட்டால் அவரை அந்த கதையின் சிறப்பாக காட்டுவதில் மகிழ் திருமேனி வல்லவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் தற்பொழுது அஜித்துடன் இணைந்திருக்கும் இந்த விடா முயற்சி திரைப்படம் மகிழ் திருமேனிக்கு தன் திறமையை காட்ட சிறந்த வாய்ப்பு என்றும் குறிப்பிட்டிருந்தார் நடிகர் அருண் விஜய்.

இப்படி நடிகர் அருண் விஜய் கூறியதால் ரசிகர்கள் மேலும் நம்பிக்கை அதிகரித்து இருக்கிறார்கள். விடாமுயற்சி திரைப்படம் தல அஜித்தை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்

மேலும் நடிகர் அருண் விஜய் தற்பொழுது இயக்குனர் பாலாவின் திரைப்படத்தில் நடித்து வருகிறார் .பொதுவாகவே  இயக்குனர் பாலாவின் திரைப்படத்தில் கமிட் ஆனவர்கள் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை அடுத்த திரைப்படத்தில் கமிட் ஆக கூடாது என்று பாலா கூறி விடுவாராம் .அதன் காரணத்தினால் விடாமுயற்சி திரைப்படத்தில் அருண் விஜய் நடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார் .

Most Popular