Tuesday, October 1, 2024
- Advertisement -
Homeசினிமாசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும்  இயக்குனர் நெல்சனால் ,என்னால்  வெளியில் தலை காட்ட முடியவில்லை-ஜெய்லர் விநாயகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும்  இயக்குனர் நெல்சனால் ,என்னால்  வெளியில் தலை காட்ட முடியவில்லை-ஜெய்லர் விநாயகம்

தமிழ் திரை உலகை தலை நிமிர வைத்துள்ள படங்களில் ஜெயிலர்  திரைப்படம் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறது. முதன் முதலில் அறநூறு கோடி வசூல் சாதனையை பெற்று முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றொரு  மணி மகுடமாய் மாறி இருக்கிறது ஜெயிலர்  திரைப்படம்.
ரஜினிகாந்தின் சமீபத்திய படங்கள் சறுக்கல்களை சந்தித்த போதும், இயக்குனரான நெல்சன் பல விதமான விமர்சனங்களை பெற்று நொந்து நூடுல்ஸ் ஆன போதும் ,இருவருக்கும் பெரும் உத்வேகமாகவும்! திரை பயணத்தை தொடர்வதற்கான ஆவலையும் கொடுத்துள்ளது ஜெயிலர் திரைப்படம்..!

  இப்படத்தில் வில்லனாக களம் இறக்கப்பட்ட விநாயகத்தின் நடிப்பு, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.!ஏற்கனவே களத்தில் இருந்தாலும் திடீரென்று செஞ்சுரி அடிக்கும் பேட்ஸ்மேன்கள் போல் ! திமிரு, மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவ்வளவாக மக்களுக்கு தெரியப்படாத நடிகர் விநாயகம் திடீரென்று ஜெயிலர் படத்தில் அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கே வில்லனாக நடித்து அனைத்து பால்களையும் சிக்ஸர் ஆக மாற்றியுள்ளார்.

- Advertisement -

  வர்மன் கதாபாத்திரத்தில் விநாயகத்தின் மிரட்டலான நடிப்பும் மலையாளம் கலந்த அவருடைய வசனங்களும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது
விநாயகம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதிலளிக்கையில்; தனது மேனேஜருக்கு தான் முதலில் போன் வந்ததாகவும், சூப்பர் ஸ்டார் நடிப்பில் இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் நடிக்க விருப்பமா ? என்று கேட்கப்பட்டதாகவும்  தெரிவித்தார்.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் அருகில் நின்றால் கூட போதும் என்று ஏக்கத்தில்  இருந்த தனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக கூறினார்.ஆனால் இந்த அளவுக்கு தன்னுடைய கதாபாத்திரம் மக்களால் பாராட்டப்படும் என்று சிறிதும் அவர் நினைக்கவில்லையாம்.

ஜெய்லர் திரைப்படத்திற்குப் பின்பு , என்னால் முன்பு போல் வெளியில் சுதந்திரமாக தலை காட்ட முடிவதில்லை, வெளியில் சென்றால் உடனே ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டு கொண்டு விடுகிறார்கள் என்று பெருமிதத்துடன்  கூறினார்.

ஜெய்லர் படத்தில் தாங்கள் விரும்பும் காட்சி என்ன என்ற கேள்விக்கு ?அனைத்து காட்சிகளும் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு  நெல்சன் இயக்கினார் ! அதனால் ஒரு நகம் கடிக்கும் காட்சி என்றால் கூட அது எனக்கு மிகவும் பிடிக்கும் , குறிப்பிட்டு ஒரு காட்சியை என்னால் சொல்ல முடியாது என்று கூறினார்..

மேலும் இத்தகைய பெருமையை தான் பெற்றதற்கு காரணமாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு தனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கை கூப்பிய படி நெகிழ்ந்து கூறினார் வில்லன் வருமன் !!!

Most Popular