Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகர் போண்டாமணியின் மகள் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் இவ்வளவா? -...

நடிகர் போண்டாமணியின் மகள் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் இவ்வளவா? – மேல்படிப்பிற்கு உதவும் பிரபலம் !

தமிழ் சினி உலகத்தில் சிறந்த காமெடி நடிகர்களான வடிவேலு, விவேக் உள்ளிட்ட நடிகர்களுடன் அதிகம் சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகர் போண்டா மணி. அவருடைய மகள் தற்பொழுது 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவருடைய மேல் படிப்பிற்கு தயாரிப்பாளர் ஒருவர் உதவ முன்வந்துள்ளார்.

- Advertisement -

சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற படப்பிடிப்பின் போது வெளியான விஷவாயுவினால் பாதிக்கப்பட்டார் நடிகர் போண்டாமணி. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்.

நடிகர் போண்டாமணி கடைசியாக பருவ காதல் எனும் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்தார். இந்த வேடத்தில் ஒரு சீனில் அவர் சாக்கடைக்குள் விழுவது போன்று எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது இந்த நிலையில் அதன் உண்மை தன்மைக்காக நடிகர் போண்டாமணி டூப் போடாமல் நடித்தார்.

- Advertisement -

இதன் பின்னர் சாக்கடைக்குள் விழுந்த அவருக்கு உடலுக்குள் அந்த நீர் அனைத்தும் சென்றது இதனால் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டது. நுரையீரலும் பாதிக்கப்பட்டது பாதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பல நாட்கள் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வருகிறார்.

- Advertisement -

அவர் நோய் வாய் பட்டு மருத்துவமனையில் இருந்த பொழுது அவரிடம் கேட்கும்போது நடிகர் வடிவேலு அவருக்கு ஒரு உதவியுடன் செய்ய முன்வரவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார். அப்பொழுது நடிகர் விவேக் பற்றியும் அவர் பேசியிருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்து ஒன்று. இந்த நிலையில் நடிகர் போண்டாமணி தற்பொழுது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் குறித்து ஒரு நெகிழ்ச்சியான தகவலை கூறி உள்ளார்.

தற்பொழுது போண்டாமணியின் மகள் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 400 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் உடம்பு சரியில்லாமல் இருக்கும் பொழுது தயாரிப்பாளர் ஐசரி கணேசன் என்னிடம் வந்து உன் மகளின் மேற்படிப்பை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து இருந்தார். அது போலவே தற்பொழுது தேர்வு முடிவு வெளியான பின்பு அவரை தொடர்பு கொண்ட போது என் மகளின் மேற்படிப்பிற்கான முழு செலவையும் நானே ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி போன்ற மனிதர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் இவரின் உதவிக்கு நான் எப்போதும் விசுவாசத்துடன் நன்றியோடு இருப்பேன், இன்று நடிகர் போண்டாமணி தெரிவித்து இருந்தார்.

Most Popular