Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகை ராஷ்மிகா மற்றும் நடிகர் தனுஷ் இணைந்திருக்கும் வீடியோ கசிந்திருக்கிறது ..!அதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகை ராஷ்மிகா மற்றும் நடிகர் தனுஷ் இணைந்திருக்கும் வீடியோ கசிந்திருக்கிறது ..!அதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து ரயான் என்ற திரைப்படத்தை தானே எழுதி இயக்கி நடித்து வருகிறார். இவர் இயக்கத்தில் உருவாக்கும் இரண்டாவது திரைப்படம் இது. இதற்கு முன்பு ராஜ்கிரண் ,ரேவதி, மடோனா செபாஸ்டின் நடித்த பவர் பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கி நடித்தும் இருந்தார் நடிகர் தனுஷ்.

- Advertisement -

வித்தியாசமான கதை களத்தில் அமைந்த அந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரும் அளவில் வரவேற்று வந்தார்கள். இதை தொடர்ந்து நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இரண்டாவது திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் நடிகர் தனுஷ். இத்திரைப்படத்தில் நடிகர் எஸ் .ஜே சூர்யா வில்லனாக நடிப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது .இத்திரைப்படத்தின் பணிகள் ஏறத்தாழ முடிவு செய்து விரைவில் வெளியிடப்படும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

சமீபத்தில் வெளிவந்த இந்த பர்ஸ்ட் லுக் இருக்கு  ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் இருந்தது .இதை தொடர்ந்து தற்போது தன்னுடைய 51 வது திரைப்படத்தை தெலுங்கு திரைப்பட இயக்குனர் சேகர் கம்முலாவுடன் நடிகர் தனுஷ் நடிக்கப் போவதாக இருக்கிறார். தெலுங்கு இயக்குனருடன் கைகோர்ப்பது நடிகர் தனுஷிற்கு இது புதிதல்ல .

- Advertisement -

இதற்கு முன்பு இவர் நடித்த வாத்தி திரைப்படமும் ஒரு தெலுங்கு திரைப்பட இயக்குனர் இயக்கியதுதான் .ஆனால் திரைப்படம் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்து மண்ணை கவ்வியது. அதை ஈடு செய்ய அவர் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படமும் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இருப்பினும் அதைத்தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தில் 50-வது திரைப்படத்தை நடித்திருக்கிறார் நடிகர் தனுஷ். தற்பொழுது அவர் நடிக்க இருக்கும் 51 வது திரைப்படத்தின்  வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்திருக்கிறது .திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார்.

இணையத்தில் கசிந்த அந்த காணொளியில் நடிகை ராஷ்மிகா மந்தானா நடிகர் தனுஷை  ஒரு கேட்டில் இருந்து அழைத்து வருவது போன்ற வீடியோ அது. ஒரு திரைப்படம் இயக்குகிறது என்றால் அதற்கு அவ்வளவு பாதுகாப்புகள் இருக்கும் எளிதில் அது கசிவது அரிது தான். ஆனால் எப்படி இந்த வீடியோ வெளியில் வந்தது என்று தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ரசிகர்களும் கூட அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க முதல்முறையாக ஸ்கிரீனில் நடிகர் தனுஷும், நடிகை ராஷ்மிகா மந்தானாவும் இணைந்து இருப்பதை பார்க்க அழகாக இருக்கிறது. இவர்களின் காம்போவில் திரைப்படம் எடுப்பதை ரசிகர்கள் வரவேற்று வருகிறார்கள். இது ஒரு புறம் தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் இந்த வீடியோ எப்படி வெளியானது என்ற கேள்வியும் அதிகரித்திருக்கிறது.

Most Popular