சினிமா

தயவு செய்து இப்படி பண்ணாதீங்க ராஜா..! ரசிகர்களை கண்டித்த தனுஷ்

இயக்குனர் வெங்கி கலூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து இருக்கும் வாத்தி திரைப்படம் வருகின்ற 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து சமீkதா மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தின் வா வாத்தி என்ற பாடல் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்து கொண்டிருக்கிறது.

Advertisement

இந்த நிலையில் பிப்ரவரி நான்காம் தேதியான நேற்று வாதி திரைப்படத்தின் உடைய ஆடியோ லாஞ்ச் வெளியானது.
இந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வருகை தந்திருந்தார். இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இயக்கிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க  நடிகர் தனுஷ் மேடையில் பேசிய பேச்சு ரசிகர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு சாமானிய நடிகரைப் போல வெறும் திரைப்படத்தை பற்றி மட்டும் பேசாமல் தன்னை வாழ வைப்பதே தன் ரசிகர்கள் தான் என்பதால் அவர்களை வாழ வைக்க சில அறிவுரைகளையும் நடிகர் தனுஷ் கூறியிருந்தார். பொதுவாக ஏதாவது ஒரு பிரபலத்தை ரசிகர்கள் கண்டால் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை கூட மறந்து அவர்களை பின்தொடர்வது பெரும்பாலான ரசிகர்களின் வழக்கமாகும்.அதனை கண்டிக்கும் வகையில் நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.

Advertisement

தன்னுடைய ரசிகர்களை பார்த்து அன்பான முறையில் நடிகர் தனுஷ் என்னை யாராவது இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தால் என் மனம் பதறும் .பெற்றவர்கள் உங்களை நம்பி தானே அனுப்பி வைத்தார்கள். அவர்களும் உங்களை நம்பி தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனை கெடுக்கும் வகையில் என்னை பின் தொடர்ந்து உங்கள் வாழ்வை இழக்காதீர்கள். அதனால் தான் நான் பொதுவாக இந்த விஷயத்தை ஊக்குவிப்பது இல்லை.

அவ்வபோது நான் அதற்கு பதில் கூறும் வகையில் புகைப்படம் எடுப்பது போன்று எந்த செயலிலும் ஈடுபட மறுத்து விலகி விடுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். இப்படி செய்யாதீர்கள் ராஜா என்று நடிகர் தனுஷ் தன்னுடைய ரசிகர்களுக்கு கனிவான முறையில் எடுத்துக் கூறினார்.தனுஷின் ரசிகர்கள் அரங்கம் அதிரும் அளவிற்கு ஆரவாரம் செய்தார்கள் அவர் நடிகர் தனுஷின் மீது இன்னும் அவர்களுக்கு மரியாதை அதிகமானது அந்த ஆரவாரத்தில் தெரிந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top