90ஸ் கிட்ஸ் களின் உள்ளம் கவர்ந்தவர் இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா. சூப்பர் ஸ்டாரின் பிரத்யேக இசையை பாட்ஷா படத்தில் இசையமைத்து ,இன்றளவும் அதனை தொடர வைத்திருக்கும் பெருமைக்கு சொந்தக்காரர்..!
ஆசை, பாட்ஷா, நேருக்கு நேர், அவ்வை சண்முகி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இன்றளவும் அந்த பாடல்களை கேட்டால் ரசிகர்கள் வைப் ஆகி போவார்கள். இவர் அனிருத்தின் இசையில், தளபதி விஜயின் தெறி படத்தில், ஜித்து ஜில்லாடி பாடலை பாடி மாஸ் காட்டினார் .
மாமன்னனில் ஏ ஆர் ரகுமான் இசையில் நெஞ்சமே பாடலை பாடி கிறங்க வைத்தார்!
ஒரு பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷுக்கு வில்லனாக களம் இறங்கப் போவதாக கூறி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார் தேவா.
அனைவரது எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ள நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி அன்று உலகம் எங்கும் திரையிடப்பட உள்ளது.
இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். வரலாற்று படமாக ரசிகர்களை பதம் பார்க்க இருக்கும் கேப்டன் மில்லர் சுதந்திரப் போராட்ட காலங்களை நினைவு கூறும் வகையில் இருக்கும் என்பது படத்தின் டீசர், போஸ்டர்களில் உணர முடிகிறது.!
கதாநாயகன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற நியதியை ஓரம் கட்டி நடிப்பின் மூலம் ரசிகர்களின் அன்பை பெற முடியும் என்று நிரூபித்த நடிகர் தனுஷ் கோலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் , பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் வாத்தி படம் தெலுங்கில் “சார்” என்று வெளியானது அங்கும் வெற்றியை தனதாக்கி கொண்டார் தனுஷ்!!!
தனுஷ் கேப்டன் மில்லரை தொடர்ந்து தனது 50 வது படத்தை நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கவும் போகிறார் .சன் பிக்சர்ஸ் நிறுவனம் ,தனுஷ் உடன் கைகோர்த்து பிரம்மாண்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது..
இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா , சந்தீப் கிஷன் அபர்ணா முரளி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் களம் இறங்குகிறார்கள்.
வடசென்னையை மையமாக வைத்து அதிரடி ஆக்ஷன் படமாக கதை அமைந்திருக்கிறது.
தற்போது தனுஷ் 50 படம் ஆரவாரமாக தொடங்கி பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தை அக்டோபர் மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறார் தனுஷ்..!
இந்த சூழ்நிலையில் நடிகர் தனுஷ் நேரடியாக தேவாவிற்கு போன் செய்து இப்படத்தில் வில்லனாக நடிக்க அழைப்பு விடுத்ததாக தேவா கூறியுள்ளார்!!தன்னை தேர்வு செய்தது நோக்கம் என்ன ?என்று தனுஷிடம் கேட்டதாகவும்; அதற்கு தனுஷ், வடசென்னையை மையமாக வைத்து இந்த கதை உருவாகி வருவதனால், உங்களுடைய வட சென்னை பாஷை இதற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் உங்களை வில்லனாக தேர்ந்தெடுத்தேன் என்று கூறினாராம் !! இசையமைப்பாளர் தேவாவின் இன்னொரு பரிணாமத்தை காண ஆவலுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்!