தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்கி வரும் நடிகர் தனுஷ் தற்போது தன்னுடைய ஐம்பதாவது திரைப்படத்தில் நடித்த வருகிறார்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் தனுஷ் இந்த படத்தை இயக்கவும் செய்கிறார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான பணியையும் தொடங்கி விட்டார்.
தனது 49வது திரைப்படமான கேப்டன் மில்லர் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் அது டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் தன்னுடைய ஐம்பதாவது திரைப்படத்தில் மிக நேர்த்தியாக தனுஷ் பணியாற்றி வருகிறார்.
இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிர வைத்திருக்கிறது. தற்போது தனுஷ் 51-வது திரைப்படத்தில் மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் இணைந்து இருக்கிறார்.
இயக்குனர் சேகர் கமுலாவுடன் நடிகர் தனுஷ் பணியாற்று உள்ளார். இவர் தமன்னா நடித்த ஹாப்பி டேஸ், சாய் பல்லவி,ரவி டேஜ் நடித்த பிதா போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் திரைப்படத்தை இயக்க இருப்பதால் அதுவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது இந்த படத்தில் தெலுங்கு ஆடியன்ஸை கவரும் விதமாக நடிகை ராஷ்மிகா மந்தானா இணைந்துள்ளார். இது தொடர்பாக வீடியோவை வெளியிட்டுள்ள ராஷ்மிகா மந்தானா தனுசுடன் நடிப்பது தொடர்பான மகிழ்ச்சியை வெளியிட்டு இருக்கிறார்.
தனுஷ் நடனத்தில் பின்னிப் பிடலெடுப்பார்.அதேபோல் ராஷ்மிகாவும் சிறப்பாக ஆடக்கூடியவர். இதனால் இருவரும் இணைந்து ஒரு பாடலில் ஆடினால் சிறப்பான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.