சினிமா

விஸ்வாசம் படத்தில் பணியாற்றியவருக்கு ஜெயம் ரவி கொடுத்த வாய்ப்பு

துடிப்பான நடிகரான ஜெயம் ரவி, தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்டமான திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவர் ஒரு சோழ மன்னனாக நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கதாபாத்திரத்திற்கு ஜெயம் ரவி தகுதியானவர் என்றும் விமர்சனங்கள் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

Advertisement

மேலும் நடிகர் ஜெயம் ரவி அகிலன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இயக்கியிருப்பது கல்யாண் கிருஷ்ணா என்ற ஒரு புதுமுக இயக்குனர்.இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.தொடர்ந்து இறைவன் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.என்றென்றும் புன்னகை மனிதன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அகமத் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் ஆன திரைப்படமாக அமைந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஏறத்தாழ ஒரு 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து தற்பொழுது நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய 31 வது படத்தில் அந்தோணி பாக்யராஜ் என்ற ஒரு புதுமுக இயக்குனரோடு கைகோர்த்து உள்ளார். அந்தோணி பாக்யராஜ் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் கதை ஆசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லட்சுமணன், பூலோகம் படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண்,அடங்கமறு திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல், கோமாளி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரங்கநாதன் போன்ற புதுமுக இயக்குனர்களை இயக்குனர்களை நம்பி வாய்ப்பு கொடுத்த ஜெயம் ரவி தற்பொழுது இன்னும் ஒரு இயக்குனரோடு தன்னுடைய திரைப்படத்தை நடிக்க ஒப்பந்தமிட்டு இருக்கிறார்.

Advertisement

இப்படி புதுமுக இயக்குனர்களோடு திரைப்படத் நடித்த ஜெயம் ரவி எல்லா படங்களிலுமே வெற்றி பெற்று ரசிகர்களிடம் பெரும் அளவில் வரவேற்பை பெற்றவர். தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களை நடித்து வருகிறார்.மேலும் புதுமுக இயக்குனர்களாக இருந்தாலும் நடிகர் ஜெயம் ரவி அவர்களுக்கும் வாய்ப்பு அளித்து தன்னுடைய நடிப்பால் திரைப்படங்களையும் வெற்றி அடைய செய்து வருகிறார். இதற்கு முன்பு இவர் புதுமுக இயக்குனர்களோடு நடத்த படங்கள் வெற்றி அடைந்தது.இந்த திரைப்படங்களும் வெற்றியடையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top