Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகர் கமல்ஹாசனின் அடுத்த படம்.. மிரட்டலான இயக்குனருக்கு கிரின் சிக்னல்

நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படம்.. மிரட்டலான இயக்குனருக்கு கிரின் சிக்னல்

- Advertisement -

விக்ரம் வெற்றி மூலம் தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் உச்சத்தை தொட்டு உள்ளார் நடிகர் கமல்ஹாசன். ஒரு காலத்தில் கமலுக்கும் ரஜினிக்கும் நேரடி போட்டிகள் இருந்து கொண்டே இருந்தது. ஒரு தருணம் ரஜினி படம் சூப்பர் ஹிட் ஆனால் அடுத்த தருணம் கமல் படம் அந்த  வசூலை முறியடிக்கும். ஆனால் 90களில் பிற்பகுதியில் நடிகர் கமல்ஹாசன் ஆக்சன் சினிமாவை விட்டு கலை நயத்துடன் திரைப்படங்களை எடுக்க தொடங்கி விட்டார்.

ஆனால் அதே சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜனரஞ்சமான படங்களை தொடர்ந்து கொடுத்து மேலும் உச்சத்தை தொட்டார். இந்த நிலையில் கமல்ஹாசனும் விஸ்வரூபம், தசாவதாரம் போன்ற பெரிய ஹிட் படங்களை கொடுத்தாலும் அடுத்த சில ஆண்டுகள் பெரிய அளவில் எந்த ஹிட்டயும் கொடுக்காமல் அவருடைய மார்க்கெட் மிகவும் சுருங்கி இருந்தது.

- Advertisement -

உதாரணத்திற்கு விஸ்வரூபம் முதல் பாகம் 200 கோடி மேல் வசூல் சாதனை செய்த நிலையில் விஸ்வரூபம் 25 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது. இந்த நிலையில் நடிகர் கமலுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. தமிழகத்தில் மட்டுமே 210 கோடி ரூபாய் வசூலை விக்ரம் திரைப்படம் பெற்றது. இதனை அடுத்து நடிகர் கமல் அவருடைய சம்பளத்தை அதிகப்படுத்தினார். மேலும் பல்வேறு இயக்குனர்களும் நடிகர் கமலை வைத்து படம் எடுக்க முன் வந்தனர்.

- Advertisement -

ஏற்கனவே நின்று போன இந்தியன் 2 திரைப்படமும் தற்போது மீண்டும் விக்ரம் இன் வெற்றியால் தொடங்கி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை தவிர நடிகர் கமல்ஹாசன்,எச் வினோத், வெற்றிமாறன் ,ரஞ்சித் போன்ற இயக்குனர்களுடன் கைகோர்க்க உள்ளார். இந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிகர் கமல் யாருடன் அடுத்த படத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி இருந்த நிலையில் அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
அசுரன், வடசென்னை போன்ற படங்களை எடுத்த  வெற்றிமாறனுடன் இணைந்து நடிகர்கள் கமல்ஹாசன் அடுத்த படத்தை நடிக்க உள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்த சில நாட்களிலே இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும். இந்த படத்தை விரைவில் முடிக்க கமல் திட்டமிட்டுள்ளார். வரிசையாக பெரிய இயக்குனர்களுடன் கமல் இணைந்திருப்பதால் அவர்களுடைய ரசிகர்களுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது.

Most Popular