Sunday, December 1, 2024
- Advertisement -
Homeசினிமாஸ்ருதிஹாசனை கடத்த முயன்ற வேலைக்காரர்கள்.. கமல்ஹாசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஸ்ருதிஹாசனை கடத்த முயன்ற வேலைக்காரர்கள்.. கமல்ஹாசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

- Advertisement -

தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத படங்கள் பல இருக்கின்றன. இதில் கமல்ஹாசன் நடித்து வெளியான மகாநதி திரைப்படமும் ஒன்று.வசூல் ரீதியில் இந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் இன்று வரை டாப் 10 கமல் படங்களில் மகாநதிக்கு தனி ஒரு இடம் உண்டு.

- Advertisement -

இதில் யாருமே பேச பயந்த கதையை ,இழப்பை நடிகர் கமலஹாசன் பேசி இருந்தது இன்று வரை ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது. தன்னுடைய பெண் குழந்தை காணாமல் போய் பாலியல் தொழிலாளர் உடன் சிக்கி அதன்பிறகு அந்த குழந்தையை கமல்ஹாசன் மீட்டு எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் கதை .

- Advertisement -

கமல்ஹாசன் ஏன் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்தார் என்பது அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது. இந்த நிலையில் இது குறித்து முதல் முறையாக கமல்ஹாசன் மவுனத்தை கலைத்துள்ளார்.

இது குறித்து பேசியவர் மகாநதி படத்தை எப்படி எழுதினீர்கள் என்று பலரும் கேட்டிருக்கிறார்கள். அது குறித்து நான் இதுவரை வாய் திறந்தது இல்லை. முதன்முதலாக இப்போது சொல்கிறேன்.

நான் வளரும் கலைஞனாக இருந்தபோது ஸ்ருதிஹாசன் சின்ன வயது. அப்போது என் வீட்டில் பணிபுரிந்த வேலையாட்களே ஸ்ருதிஹாசனை கடத்தி என்னிடம் பணம் கேட்டு மிரட்ட பிளான் போட்டார்கள்.

இதனை நான் எப்படியோ தெரிந்து கொண்டேன். அப்போது எனக்கு சரி கோபம் வந்தது. என் குழந்தையை கடத்த முயன்றவர்களை கொல்ல வேண்டும் என நினைத்தேன். ஆனால் கொஞ்சம் அமைதியான பிறகு இது தொடர்பாக படத்தை ஏன் நாம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடாது என நினைத்தேன்.

அதன் பிறகு எழுதியது தான் மகாநதி ஒரு தந்தையின் கோபமாக வெளியான படம் தான் அது என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார். கமல்ஹாசனின் இந்த பேட்டி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

Most Popular