Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாஅஜித் போலவே துப்பாக்கி கையுமாக நிற்கும் கமல்.. ஹெச்.வினோத் செய்த காரியம்!

அஜித் போலவே துப்பாக்கி கையுமாக நிற்கும் கமல்.. ஹெச்.வினோத் செய்த காரியம்!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களின் ஒருவராக எச் வினோத் உயர்ந்திருக்கிறார். அவர் எடுத்த வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் துணிவு திரைப்படம் அஜித்துக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது..

- Advertisement -

அஜித் திரைப்பட வாழ்க்கையில் அதிக வசூலை பெற்ற திரைப்படம் வெளிநாடுகளில் அஜித்துக்கு என ஒரு மார்க்கெட்டை உருவாக்கிய திரைப்படம் என பல பெருமைகளை துணிவு படைத்தது.

இந்த நிலையில் தற்போது நடிகர் கமலஹாசனை வைத்து எச் வினோத் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான சூட்டிங் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் ராணுவ அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.

- Advertisement -

இதற்காக நடிகர் கமல் தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். மேலும் விதவிதமான துப்பாக்கிகளை எப்படி சுடுவது என்பது குறித்து தனி கவனம் எடுத்து நடிகர் கமலஹாசன் இந்த பயிற்சியில் ஈடுபடுகிறார்.

- Advertisement -

பேன் இந்தியா மொழிகளில் படுத்த ரிலீஸ் செய்ய கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதற்காக தமிழிலும் பிற மொழிகளிலும் முகம் தெரிந்த நடிகர்களை நடிக்க வைக்க முதல் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஜவான் திரைப்படம் வெற்றியின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி இந்திய அளவில் பெரிய நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார்.

கமல் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதே போன்று மேலும் இரண்டு நடிகர்களை நடிக்க வைக்க கமலஹாசன் நிகழ்ச்சிகளை எடுத்து வருகிறார்.

இன்னும் சொல்லப்போனால் நடிகர் பிரபாஸை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க கமல் முடிவு எடுத்திருக்கிறார். கல்கி திரைப்படத்தில் கமல் வில்லனாக பிரபாஸுக்காக நடிக்கிறார். அந்த நட்பை வைத்து பிரபாஸ் தேதியை கமல் வாங்க முடிவெடுத்துள்ளார் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்து இருக்கிறது.

Most Popular