Friday, April 19, 2024
- Advertisement -
HomeUncategorizedவிருமன் திரைப்படத்திற்கு புதிய ரீலிஸ் தேதி.. விசாலுடன் மோதும் கார்த்தி

விருமன் திரைப்படத்திற்கு புதிய ரீலிஸ் தேதி.. விசாலுடன் மோதும் கார்த்தி

- Advertisement -

நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படம் விருமன். சூர்யாவின் 2டி நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. கொம்பன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, இயக்குனர் முத்தையா விருமன் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்த படத்தில் முதல் முறையாக இயக்குனர் சங்கரின் மகளான அதீதி சங்கர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். கிராம கதைக்களத்தை கொண்டு திரைப்படங்களை ஆக்சன் சண்டை காட்சிகளுடன் வழங்குவதில் கைதேந்தவர் இயக்குனர் முத்தையா. இயக்குனர் முத்தையா சாதிய ரீதியில் படம் எடுப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும், அவருடைய படம் பெரும்பாலும் வெற்றியை தருகிறது. இந்த நிலையில் விருமண் திரைப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 12ஆம் தேதி ரிலீசாக இருந்த நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படம் தள்ளிப் போகிறது. இதனால் விருமன் திரைப்படத்தை ஆகஸ்ட் 30ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய பட குழு முடிவு எடுத்துள்ளது .

- Advertisement -

ஆனால் அன்றைய தேதியில் நடிகர் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படமும் திரைக்கு வருகிறது. ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள லத்தி திரைப்படம் விஷாலுக்கு மிக முக்கிய படமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஷாலின் நெருங்கிய தோழனான கார்த்தியின் திரைப்படமும் அதே நாளில் ரிலீஸ் ஆவது லத்தி திரைப்படத்திற்கு பின்னடைவை தந்துள்ளது. இதனிடையே விருமன் திரைப்படம் மதுரை, தேனி ஆகிய ஊர்களின் கதைகளை வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் வரும் மூன்றாம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்த படக்குழு முடிவெடுத்துள்ளது.

- Advertisement -

கார்த்தியின் திரைப்படம் திட்டமிட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆக உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதன் பிறகு சரியாக 45 நாட்கள் இடைவெளியில் நடிகர் கார்த்தி விக்ரம் ஜெயம் ரவி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீசாக உள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் நடிகர் கார்த்தியை மையப்படுத்தி உருவான பாடல் விரைவில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் கடந்த இரண்டு நாட்களில் நடிகர் கார்த்திக் தொடர்பாக இரண்டு அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன.

Most Popular