Wednesday, May 1, 2024
- Advertisement -
Homeசினிமாஅடுத்த இளைய தளபதி கவின் தான்.. வரிசை கட்டி நிற்கும் படங்கள்! வேற லெவல்!

அடுத்த இளைய தளபதி கவின் தான்.. வரிசை கட்டி நிற்கும் படங்கள்! வேற லெவல்!

தமிழ் சினிமாவில் சீரியலில் நடித்து பின் சினிமாவில் நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் கவின். இவர் நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

- Advertisement -

ஆனால் அதன் பிறகு பிக் பாஸில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. அதன் பிறகு கவின் நடித்த லிப்ட் என்ற திரைப்படம் ஹாட் ஸ்டார் இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பிறகு 2023 ஆம் ஆண்டு கவின் நடித்த தாதா என்ற திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது.

குறுகிய பட்ஜெட்டில் அதிக வசூல் எடுத்த திரைப்படம் பட்டியலில் தாதா மிக முக்கியமான இடத்தை பெற்றது. இந்த நிலையில் நடிகர் கவின் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக விளங்கி வருகிறார். தற்போது அவருக்கு பல படங்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

அதுக்கு என்னவென்று தற்போது பார்க்கலாம். தற்போது இயக்குனர் சதீஷ் உடன் இணைந்து கவின் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பது மிகப்பெரிய கவனத்தை பெற்றிருக்கிறது. இதன் பிறகு கவின் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த திரைப்படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார். இயக்குனர் எலான் இந்த படத்தை உருவாக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து கவின் தன்னுடைய ஆறாவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்து வருகிறார்.

இதில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கும் அனிருத் இசை அமைத்து வருகிறார். இதேபோன்று கவின் தன்னுடைய ஏழாவது படத்தில் தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோன்று இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க நடிகர் கவின் ஆயத்தமாகி வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து பெரிய பெரிய ஸ்டார் மற்றும் இசையமைப்பாளர்கள் படங்களில் கவின் நடித்து வருவதால் அவர் மேலும் உச்சத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக திரைத்துறை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Most Popular