கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் மரணித்தது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அவருடைய இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் அவரால் நன்மை பெற்றவர்கள். நடிகர் விஜய், சூர்யா போன்ற பிரபலங்கள் இன்று முதன்மையில் இருப்பதற்கு அவரும் ஒரு முக்கிய காரணமாவார் .
தளபதி விஜய்க்கு செந்தூரப் பாண்டியன் திரைப்படத்திலும், சூர்யாவிற்கு எங்கள் அண்ணா திரைப்படத்திலும் சிறப்பு கதாபாத்திரமாக விஜயகாந்த் நடித்தது தான் அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவர்களின் வாழ்வை செழிமையடைய செய்த விஜய் காந்தாள் தன் மகன்களின் வாழ்வை ஒளிமயமாக்க முடியவில்லை. நோய்வாய் பட்டு நீண்ட நாட்களாக அவதிப்பட்ட அவர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டது.
தன்னுடைய மூத்த மகனான சண்முக பாண்டியன் நடித்த முதல் திரைப்படம் ஆன சகாப்தத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் விஜயகாந்து நடித்திருந்தார் ஆனால் அது படுதோல்வி அடைந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு அது போன்ற முயற்சிகளில் அவர் எதுவும் ஈடுபடவில்லை.
தன் தந்தையின் உடல் நலக்குறைவால் அதன் மீது கவனம் செலுத்தி வந்த சண்முக பாண்டியனும் அதன் பிறகு எந்த திரைப்படத்திலும் பெரும் அளவில் நடிக்கவில்லை .
ஆனால் தற்பொழுது இயக்குனர் அன்பு இயக்கத்தில் படை வீரன் என்ற ஒரு ஆக்சன் திரில்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே துவங்கி விட்டது.
அவருடைய தந்தையான விஜயகாந்த் இறுதி அஞ்சலிக்கு வந்த நடிகர் லாரன்ஸும் ,விஷாலும் அவருடைய திரைப்படத்தின் சிறப்பு கதாபாத்திரமாக நடிக்க நாங்கள் தயார் என்று வாக்களித்தார்கள்.
அதைத்தொடர்ந்து தற்பொழுது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படைவீரன் திரைப்படத்தின் நடிகர் லாரன்ஸ் சிறப்பு கதாபாத்திரத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜயகாந்த்திற்கு கடமைப்பட்ட விஜய்யும், சூர்யாவும் செய்யாத செயலை நடிகர் லாரன்ஸ் தற்பொழுது செய்வது அவர் மீது மரியாதையை பலர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
தந்தை இழப்பில் இருக்கும் சண்முக பாண்டியனுக்கு புது வாழ்வை தரப்போகும் திரைப்படமாக இந்த படை வீரன் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்காக நடிகர் லாரன்ஸ் மூன்று நாட்களை கால் சீட்டுகள் கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.