மார்ச் 4ஆம் தேதி ஆன நேற்று தமிழக அரசு திரைப்பட விருது நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு பல விருதுகளையும் பெற்றனர்.
இதில் 2015 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படம் என்ற விருதை நடிகர் மாதவன் நடித்த இறுதிச்சுற்று திரைப்படம் பெற்றது. சிறந்த நடிகருக்காக நடிகர் மாதவனும், சிறந்த இயக்குனருக்காக சுதா கங்கூராவும் ,சிறந்த நடிகைக்கான பரிசு ரித்திகா சிங் ,சிறந்த ஒப்பனைக் கலைஞர் ,சிறந்த பின்னணி குரல் பெண் பிரிவு என நிறைய விருதுகளை வாங்கி குவித்தது இறுதிச்சுற்று திரைப்படம்.
திரைப்படத்தில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. இந்த திரைப்படம் ஏதாவது ஒரு பட்டியலில் இடம் பெற்றால் நிச்சயம் அது அந்த விருதை பெற்றே தீரும் .அந்த அளவிற்கு ஒரு சிறந்த கதைக்களம் ,சிறந்த நடிகர்கள், சிறந்த இசை எல்லாமே அட்டகாசமாக அமைந்தது என்றே சொல்லலாம் .
இயக்குனர் சுதா கங்குராவை நிலை நிறுத்தி நிற்க வைத்த திரைப்படம் இறுதி சுற்று திரைப்படம். அதைத்தொடர்ந்து அவர் எடுத்த சூரரைப் போற்று திரைப்படமும் தேசிய விருதுகள் எல்லாம் பெற்று கௌரவிக்கப்பட்டது. திறமை வாய்ந்த இயக்குனர் என்ற பெயரை பெற்று விட்டார் இயக்குனர் சுதா கங்குரா.
இந்நிலையில் நடிகர் மாதவன் விருது வாங்கிய பிறகு அந்த மேடையில் இந்த விருது கிடைக்க காரணமாக இருந்த தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார் .2015 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை அளித்ததற்கும் ,சிறந்த நடிகன் என்ற பிரிவில் என்னை தேர்ந்தெடுத்ததற்கும் மிக்க நன்றி என்று தன்னுடைய நன்றியை தெரிவித்தார் நடிகர் மாதவன் .
மேலும் சக நடிகர், நடிகைகளுக்கும் விருது பெற்றவர்களுக்கும் தன்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து பேசினார் நடிகர் மாதவன்.