Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாஇயக்குனர் பாலா என்னிடம் அப்படி நடந்து கொள்ளவில்லை ..!நடிகை மமிதா பைஜூ விளக்கம்..!

இயக்குனர் பாலா என்னிடம் அப்படி நடந்து கொள்ளவில்லை ..!நடிகை மமிதா பைஜூ விளக்கம்..!

இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் மமிதா பைஜூ ஆரம்பத்தில் நடித்து வந்தார்கள் .அதன் பிறகு சூர்யா மற்றும் மமிதா பைஜு இருவருமே ஒருவர் பின் ஒருவராக அந்தப் படத்தில் இருந்து விலகி விட்டார்கள். இப்பொழுது இயக்குனர் பாலா நடிகர் அருண் விஜயை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் இந்த திரைப்படத்தை விட்டு விலகிய மமீதா பைஜூவினுடைய காணொளி ஒன்று பரவி வந்தது. ஒரு தனியார் பேட்டியில் மமிதா என்னை இயக்குனர் பாலா ஒழுங்காக நடிக்காவிட்டால் அடிப்பார் என்பது போல் கூறியிருந்தார். அது ஒரு நீண்ட நேர பேட்டியில் காணொளியின் சிறிய பகுதியாக பரவி வந்தது.

இந்த காணொளி பரவிய பிறகு இயக்குனர் பாலா மீது பெரும் சர்ச்சை ஏற்பட்டது நடிகர் நடிகைகளை சரியாக நடிக்காவிட்டால் தாக்குவது ஒரு நல்ல இயக்குனருக்கு அழகா என்று பலரும் பாலாவை கரித்துக் கொட்டி வந்தார்கள்.

- Advertisement -

இப்பொழுது அந்த காணொளியைப் பற்றி ஒரு விளக்கத்தை செய்தியாளர்களுக்கு தந்திருக்கிறார் நடிகை மமிதா பைஜூ செய்தியாளர்களிடம் அந்தக் காணொளியில் நான் நிறைய பேசியிருந்தேன். அதில் ஒரு சிறிய பகுதியை மட்டும் எடுத்து வைரல் ஆக்கியிருக்கிறார்கள் .

- Advertisement -

நான் கூறிய பொருள் அதுவல்ல முதலில் என்னை இயக்குனர் பாலா நல்ல முறையில் தான் நடத்தி வந்தார் .அவர் எனக்கு அதிகம் ஸ்பேஸ் கொடுத்தார் .சுதந்திரம் கொடுத்தார் .அவரோடு பணியாற்றியபோது  எனக்கு எந்த சங்கடமும் ஏற்படவில்லை. ஏறத்தாழ ஒரு வருடம் நான் அவருடன் பழகி இருக்கிறேன். முழு சுதந்திரத்தோடு தான் என்னை நடத்தி வந்தார் .நான் அந்த திரைப்படத்தை விட்டு விலகியதற்கு அது காரணம் அல்ல .

திரைப்படம் இயக்குவதற்கு ஆறு மாதம் தாமதமாகும் என்றார்கள் .அந்த சமயத்தில் எனக்கு வேறு வாய்ப்பு கிடைத்ததால் இதை விட்டுவிட்டு நான் அதற்கு சென்று விட்டேன். அதுதான் உண்மையான காரணம் என்று விளக்கி கூறியிருந்தார் மமிதா பைஜூ.

அப்படி என்றால் நடிகர் சூர்யா அந்த திரைப்படத்தை விட்டு விலகியதற்கு என்ன காரணம் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு நடிகை மமிதா எனக்கு அந்த படக்குழுவினர்கள் கூறியது நடிகர் சூர்யாவிர்க்கு கிரியேட்டிவ் டிஃபரென்ஸ் இருந்ததால் தான் திரைப்படத்தை விட்டு விலகி இருக்கிறார் என்று கூறினார்கள். இதுதான் எனக்கு தெரியும். வேறு என்ன காரணம் என்பதெல்லாம் எனக்கு தெரியாதுஎன்று நடிகை மமிதா பைஜூ செய்தியாளர்களிடம் கூறி இருந்த அந்த காணொளியும் தற்பொழுது பரவி வருகிறது.

Most Popular