Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாஎன்னை திருமணம் செய்யனுமா? நானெல்லாம் அவ்வளவு வொர்த்து இல்ல -மணிகண்டன்

என்னை திருமணம் செய்யனுமா? நானெல்லாம் அவ்வளவு வொர்த்து இல்ல -மணிகண்டன்

ஜெய் பீம் படத்தின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர்  நடிகர் மணிகண்டன். எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் ஈர்த்தவர்.
இவர் சமீபத்தில் நடித்து ஓடிடி யில் வெளியாகிய மத்தகம்  வெப்தொடர் இவருக்கு திருப்பு முனையாக அமைந்துள்ளது.

- Advertisement -

குட் நைட் திரைப்படத்தின் மூலம் தன் நடிப்பு திறமையை மீண்டும் நிரூபித்தார்.சமீபத்தில் தான் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தான் கடந்து வந்த பாதைகளை சுவாரசியமாக கூறினார்.  மணிகண்டன் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தானாம். திரை உலகில் காலூன்ற பலவிதமான இன்னல்களை அனுபவித்து உள்ளார். கிடைக்கிற இடங்களில் எல்லாம் வாய்ப்புகளை தட்டி கழிக்காமல் சிறிய வேடங்கள் கிடைத்தாலும் அதில் தன் தனித்திறமையை வளர்க்க உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார்.

சாப்பாட்டு பிரியரான மணிகண்டன் , அப்போதைய முழு சாப்பாட்டின் விலை 35 ரூபாயாக இருந்ததாம் ஆனால் என்பது ரூபாய் மதிப்புக்கு அவர் சாப்பிடுவாராம். பரோட்டா சூரிக்கு டஃப் கொடுப்பாராம் மணி கண்டன்.

- Advertisement -

விஜய் சேதுபதியோடு சாப்பிடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் இவர்.மத்தகம் வெப் தொடரில் டிடியோடு காதல் காட்சிகளில் நடிக்கும் பொழுது மிகவும் தயக்கம் அடைந்தாராம்! ஆனால் டிடியோ அந்த சூழ்நிலையை இயல்பாக மாற்றியதோடு மணிகண்டனுக்கு உதவி செய்ததை என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

நடிகர் மணிகண்டனை விட எழுத்தாளர்  மணிகண்டன் தான் அவருக்கு மிகவும் பிடிக்குமாம் தான் எழுதி வைத்துள்ள திரைக்கதைகள் விரைவில் உயிர் பெற வேண்டும் என்ற ஆவலையும் மணிகண்டன் வெளிப்படுத்தினார்.

மேலும் 30 வயதை கடந்ததால் அனைவரும் திருமணத்திற்கு வற்புறுத்துவதாகவும் அதைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.! அது  மட்டுமின்றி தான் நடித்த காட்சிகள் ஒன்றைக் கூட திரையில் பார்க்க விரும்ப மாட்டாராம் மணிகண்டன்..!

ஏனென்றால் தனக்குத்தானே காட்டமான விமர்சனங்களை வைத்துக் கொள்வாராம்.‌
இளம் பெண்கள் விரும்பும் கனவு கண்ணனாக இருப்பதை தாங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு நான் அவ்வளவு எல்லாம் வொர்த்தில்லையென்று !!? நகைச்சுவையாக கூறினார் மணிகண்டன்..

நடிகர்கள் என்றால் சாக்லேட் பாயாகத்தான் இருக்க வேண்டும் என்ற நியதியை மாற்றிய பார்த்திபன் விஜய் சேதுபதி வரிசையில் மணிகண்டன் இணைந்து இருக்கிறார் என்றால் அது மிகை ஆகாது.

Most Popular