வளர்ந்து வரும் நடிகரான மணிகண்டன் குட் நைட் திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் .இவர் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்தார்.
அதைத்தொடர்ந்து இவர் கதாநாயகனாக நடித்த குட் நைட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேரும் வரவேற்பை பெற்று அவருக்கு மிகப்பெரிய பெயரையும் வாங்கித் தந்தது. இவர் இயக்குனர் பிரபு ராம் இயக்கத்தில் லவ்வர் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக தற்பொழுது நடித்திருக்கிறார்.
இவர் நல்ல நடிகராக மட்டுமில்லாமல் தன்னடக்கம் உடைய பல புதுமையான சிந்தனைகளையும் உடைய நல்ல மனிதர் என்பதும் பலர் மத்தியில் இருக்கும் கருத்தாகும். அந்த அடிப்படையில் இவர் தற்போது நடித்திருக்கும் லவ்வர் திரைப்படத்திற்காக ஒரு தனியார் பேட்டியில் கலந்து கொண்டார்
.அதில் அவரிடம் ரஜினி vs கமல், விஜய் vs அஜித், தனுஷ் vs சிவகார்த்திகேயன் என்பது போல் தற்பொழுது கவின் vs மணிகண்டன் என்று கூறப்படுகிறது.
க அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் இந்த இரண்டு இரண்டு என்று பார்ப்பதில் எனக்கு மாற்று கருத்து இருக்கிறது. நம் தமிழ் சினிமாவில் 50 இயக்குனர்கள் ஏறத்தாழ இருப்பார்கள். 50 இயக்குனர்களுக்கும் ஐந்திலிருந்து ஆறு துணை இயக்குனர்கள் இருக்கிறார்கள். எத்தனையோ ஷார்ட் பிலிம் டைரக்டர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரிடமும் குறைந்தது 2000 கதைகளாவது இயக்கப்படாமல் இருக்கும்.
அதில் எவ்வளவோ நல்ல கதைகளும் இருக்கும் ஆனால் நடிப்பதற்கு நல்ல நடிகர்கள் என்று 10 பேர் தான் இருக்கிறார்கள். இதிலேயே இரண்டு இரண்டு என்று பார்த்தால் இத்தனை கதைகளும் எப்பொழுது இயக்குவது.
2000 கதைகளுக்கு மேல் அரங்கேற்றப்படாமல் முடங்கி கிடக்கிறது என்று கூறினார் மணிகண்டன்.
இரண்டிரண்டு நடிகர்களை தாண்டி 20 ,30, 40 நடிகர்கள் பெருகட்டும் அவர்களோடு போட்டி போடுவது தான் நல்லது. இரண்டு இரண்டு என்று கூறுவது நம்மை நாமே சுருக்கி கொள்வது போல் தோன்றுகிறது என்று கூறினார்.இவர் கூறியது மிகவும் சரியான பதில் என்று பல ரசிகர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.