Wednesday, December 4, 2024
- Advertisement -
Homeசினிமாநேருக்கு நேர் படத்தில் வசந்திடம் மாரிமுத்து சொன்ன பொய்.. அப்புறம் நடந்த டிவிஸ்ட் பாருங்க

நேருக்கு நேர் படத்தில் வசந்திடம் மாரிமுத்து சொன்ன பொய்.. அப்புறம் நடந்த டிவிஸ்ட் பாருங்க

எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமாகி இருப்பவர் இயக்குனர் மாரிமுத்து. இவர் எஸ்.ஜே சூர்யாவின் நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறார். இயக்குனர் வசந்திடம் எஸ் ஜே சூர்யாவும், மாரிமுத்தும் துணை இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இயக்குனர் மாரிமுத்து 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்திருக்கிறார்.அதில் இயக்குனர் வசந்த் எப்பொழுதுமே வித்தியாசமான தோற்றம் உடைய முகம் திறையில் காட்ட ஆசைப்படுவார்.

- Advertisement -

ஒரு காட்சியாக இருந்தாலும் அந்த முகம் வித்தியாசமாக அவருக்கு தெரிய வேண்டும். இதற்காக ஆங்கிலோ இந்தியர்கள் சிலரை தனது படத்தில் எப்போதுமே இயக்குனர் வசந்த் பயன்படுத்துவார்.  ஆசை திரைப்படத்தின் நடிகர் அஜித் சுபலட்சுமி பார்த்து பொட்டு எங்கே என்று கேட்கும் காட்சி நம் அனைவருக்குமே பிடித்ததாக இருக்கும்.

- Advertisement -

அதில் எனக்கு வித்தியாசமான ஒரு முகம் வேண்டும் என்று ஆங்கிலோ இந்தியன் லேடி ஒருவரை அந்த படத்தில் நடிக்க வைத்தார்.அஜித் அந்த பெண்ணை அழைத்து சுவலட்சுமியை கூப்பிடுவது போல் அந்த காட்சி இருக்கும்.

இந்த நிலையில் நேருக்கு நேர் படம் இரண்டு ஆண்டுகள் பிறகு தொடங்கியது. அப்போது ஒரு காட்சியில் எனக்கு ஆசை படத்தின் நடித்த அந்த ஆங்கிலோ இந்தியன் பெண் வேண்டும் என்று இயக்குனர் வசந்த் என்னிடம் கூறினார்.

நான் அவர் எங்கே போய் தேடுவேன் என்று அந்த பெண் இறந்து விட்டதாக பொய் சொல்லி விட்டேன். அடுத்த நாள் சூட்டிங் போது ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நான் யார் இறந்து விட்டதாக சொன்னேனோ அதே பெண் வந்திருந்தார்.

உணவு இடைவேளை போது அந்த பெண் நேராக இயக்குனரிடம் வந்து சார் என்னை நினைவு இருக்கிறதா என்று பேசினார். அந்தப் பெண்ணை பார்த்ததும் வசந்த சாக்காகி விட்டார். அதன் பிறகு என்னை அழைத்து ஒருவர் இறந்து விட்டதாக பொய் சொல்ல வேண்டுமா?அவர் வேறு ஊருக்கு போய் விட்டார், வீடு மாறிவிட்டார் என்று கூட பொய் சொல்லி இருக்கலாம் .

எதற்காக இப்படி ஒரு பொய் சொன்னீர்கள். அந்த பெண் இறந்து விட்டதாகவே நான் நினைத்துக் கொள்கிறேன். இது வேறொரு பெண் என்றும் நான் நினைத்துக் கொள்கிறேன். ஏனென்றால் நாம் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டுமல்லவா என்று கூறி எனக்கு எச்சரிக்கை விடுத்தார் என்று மாரிமுத்து அந்த நிகழ்வை நினைவு கொண்டார்.

Most Popular