சினிமா

அஜித், விஜய் இப்படி செய்வாருனு நினைச்சி கூட பார்க்கல.. பொன்னம்பலம் வேதனை

தமிழ் சினிமாவில் சிறந்த சண்டை காட்சி கலைஞராக விளங்கியவர் பொன்னம்பலம். தன்னுடைய தோற்றத்தால் பொன்னம்பலம் பல திரைப்படங்களில் வில்லனாக தோன்றினார். இந்த நிலையில் பொன்னம்பலத்திற்கு சிறுநீரக தொற்று பிரச்சனை ஏற்பட்டது.

Advertisement

இதனால் கடந்த ஒரு ஆண்டாக உடல் நலம் குன்றி உயிருக்கு போராடி வந்த பொன்னம்பலம் தற்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் பொன்னம்பலத்திற்கு போதிய பணம் இல்லாததால் பல கலைஞர்களிடம் உதவி கேட்டார்.

இதில் நடிகர் சிரஞ்சீவி 40 லட்சம் வரை கொடுத்து பொன்னம்பலத்திற்கு உதவி செய்திருக்கிறார். இதேபோன்று நடிகர் தனுஷ் விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தார்கள். ஆனால் விஜய், அஜித் ஒரு உதவி கூட செய்யவில்லை என பொன்னம்பலம் வேதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து பேசிய அவர் அஜித்தை என் சொந்த தம்பி போல் நான் நினைத்துக் கொண்டேன். எனக்காக அஜித் எப்போதும் இருப்பார் என நினைத்தேன். அஜித்தின் திருமணம் நடைபெற்றதற்கு முதல் நாள் அமர்க்களம் படத்தில் படப்பிடிப்பின் நடைபெற்றது. இதில் நானும் அதித்தும் சண்டைக் காட்சிகள் எல்லாம் நடித்தோம்.  ஆனால் என்னைப் பற்றி யார் என்ன தவறாக சொன்னார்கள் என்று தெரியவில்லை. நான் போன் செய்தாலும் கூட அஜித் தற்போது பேசுவதில்லை.

இது எனக்கு மிகவும் மனம் வருத்தத்தை கொடுத்துள்ளது. இதேபோன்று நடிகர் விஜய்யை எனக்கு செந்தூரப்பாண்டி படத்திலிருந்து தெரியும். நடிகர் விஜய்க்காக ஒவ்வொன்றையும் நான் பார்த்து செய்தேன். சண்டைக் காட்சிகள் ஒன்றில் விஜய் காயம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் பத்திரமாக நான் செயல்பட்டேன்.

ஆனால் விஜயும் தற்போது என்னிடம் பேசவில்லை. இதுபோன்று நடிகர் விக்ரம் என்னிடம் ஒரு முறை கூட தொலைபேசியில் தொடர்பு கொண்டது கிடையாது. இவர்களெல்லாம் நான் பணத்தை எதிர்பார்க்கவில்லை. எனக்காக திரைப்படத்துறையில் இத்தனை கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் யாரும் என்னை திரும்பி கூட பார்க்கவில்லை என்று பொன்னம்பலம் வேதனை தெரிவித்துள்ளார். எனினும் தமக்கு உதவிய அனைத்து கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்வதாக பொன்னம்பலம் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top