நடிகர் பிரஷாந்த் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தவர். மணிரத்னம், பாலு மகேந்திரா, ஷங்கர் ஆகிய பெரிய இயக்குனர்களுக்கு கீழ் நடித்துள்ளார். ஆனால் காலப் போக்கில் காணாமல் போய் விட்டார். சமீபத்தில் மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார். அடுத்தடுத்து படங்கள் செய்துக் கொண்டுள்ளார்.
இரு வருடங்களுக்கு முன்னர் அந்தாதுன் எனும் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ அந்தகன் ‘ படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இன்றுவரை ஒவ்வொரு பண்டிகை தவறாமல் அப்படத்தின் போஸ்டரை மட்டும் வெளியிடுவார் பிரசாந்த். ஆனால் இன்னும் படம் வெளியான பாடில்லை. தற்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் நடிக்கும் கோட் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, மீனாக்ஷி சவுத்ரி, லைலா, ஸ்னேஹா உள்ளிட்ட ஓர் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படத்தின் ஷூட்டிங் ஸ்காட்லாந்து, இலங்கை, சென்னை, ஹைதரபாத் என தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. இப்போது வரை 70% படப்பிப்பு முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீதம் இருக்கும் ஷூட்டிங் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் நிறைவு செய்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைந்து துவங்கி ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகெங்கும் ரீலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அண்மையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் டாப் ஸ்டார் பிரசாந்த்திடம் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்க்கு நகைச்சுவையாகவும் அவர் பதில் கூறினார்.
கோட் படம் எப்படி போகிறது என்பதற்கு மிகவும் சூப்பராக நடந்துக் கொண்டிருக்கிறது என்றார். பிறகு விஜய் நண்பர் பற்றி.. என கேள்வி எழுப்பும் போதே, அப்படி சொல்லாதீர்கள். அவர் எனக்கு நண்பர் அல்ல சகோதரர் என்றார். பிறகு விஜய்யின் அரசியல் வருகை குறித்து என்ன நினைக்கிறீர்கள் ? அது குறித்து அவரிடம் ஏதவாது திட்டம் தீட்டியுள்ளீர்களா ? எனக் கேட்கப்பட்டது. அதற்கு பிரசாந்த், நாங்கள் தனிப்பட்ட முறையில் பேசியதெல்லாம் பொது வெளியில் குறிப்பிட முடியாது என சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.