Friday, September 13, 2024
- Advertisement -
Homeசினிமாதெலுங்கில் பிச்சி உதறிய ரஜினிகாந்த்.. குலுங்கி சிரித்த பாலகிருஷ்ணா

தெலுங்கில் பிச்சி உதறிய ரஜினிகாந்த்.. குலுங்கி சிரித்த பாலகிருஷ்ணா

ஆந்திராவில் விஜயவாடா நகரில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் முன்னாள் முதலமைச்சர் என்டி ராமராவ் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று தெலுங்கில் பேசிய நிகழ்வு ரசிகர்களை ஆசிரியபடுத்திருக்கிறது.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் மராட்டியத்தை சேர்ந்தவராக இருந்தாலும், மற்ற மொழிகளில் பேச்சில் வல்லமை பெற்றவர். ஒரு மேடையில் எப்படி பேச வேண்டும். ரசிகர்களை எப்படி கவர வேண்டும் என்பதில் ரஜினிகாந்தை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

- Advertisement -

மொழி தெரியவில்லை என்றால் கூட அதில் பிச்சி உதறி விடுவார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று மேடையில் பேசியபோது என்டி ராமராவ் புகழ் குறித்து பல்வேறு கருத்துகளை கூறினார். மேலும் அவருடைய மகனான பாலகிருஷ்ணா குறித்து ரஜினிகாந்த் பேசியது அங்கு இருந்த ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.

- Advertisement -

இதில் பாலையா மாதிரி யாராலும் நடிக்க முடியாது. அவர் சண்டைக் காட்சியில் ஒருவரை அடித்தால் 20 மீட்டர் தாண்டி சென்று விழுவார்கள். ஜீப் எல்லாம் பறக்கும் .இது அவருக்கு மட்டும் தான் சாத்தியமாகும். இதே போன்று மற்ற நடிகர்கள் காட்சிகளை நடித்தால் மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால் பாலையாவுக்கு மட்டும் தான் இந்த காட்சிகளை மக்கள் பார்த்து ரசிப்பார்கள் என்று பாராட்டினார். மேலும் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவையும் வெகுவாக பாராட்டி ரஜினிகாந்த் பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த ரஜினிகாந்தை தலைவா வணக்கம் என்று அங்கு இருந்தவர்கள் பேசினார்கள்.

இந்த நிலையில் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகிறது. நடிகர் ரஜினியின் வெளிமாநில மார்க்கெட் பெரும் அளவு சரிந்து விட்டது. எப்போதும் தெலுங்கில் நல்ல வசூலை பெரும் ரஜினி படங்கள் அண்மைக்காலமாக சரியாக போகவில்லை. இதனை கருத்தில் கொண்டு இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் அவருடைய மார்க்கெட் மீண்டும் எழும் என்பதால் நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

Most Popular