தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு தீவிர கடவுள் பக்தர் ஆவார். தன்னுடைய திரைப்படங்களில் கடவுள் நம்பிக்கை உள்ளவராக நடித்திருக்கும் ரஜினிகாந்த் தன் படத்தின் பெயர்களுக்கு கடவுளின் பெயரையே வைப்பார்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் திரைப்படம் அவருடைய திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. இந்த படத்திற்கு பல பெயர்கள் யோசித்தும் எதுவும் செட்டாகாத நிலையில் நடிகர் ரஜினியே யோசித்து அருணாச்சலம் என்ற பெயரை வைத்திருக்கிறார்.
இதேபோன்று பாபா மீதான பற்றால் அவருடைய வாழ்க்கை வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக பாபா என்ற திரைப்படத்தை எடுத்தார். திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் என்பது ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடக்கூடிய இடமாகும்.
சிவன் அடியார்களுக்கு புண்ணிய ஸ்தலமாகவும் திருவண்ணாமலை விளங்குகிறது. இந்த நிலையில் இங்கு நடிகர் ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.
லால் சலாம் ஷூட்டிங் இன் முதல் பகுதி மும்பையிலும் இரண்டாவது பகுதி பாண்டிச்சேரியிலும் நடைபெற்ற நிலையில் தற்போது மூன்றாவது செடியூல் திருவண்ணாமலையில் நடைபெற்ற வருகிறது .இதனால், இங்கு சென்ற நடிகர் ரஜினி நேரடியாக அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
அங்கு நடிகர் ரஜினிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நடிகர் ரஜினி நீண்ட நேரம் அருணாச்சலேஸ்வர கோயிலில் வழிபாடு நடத்தினார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
அருணாச்சலம் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதாக ரசிகர்களும் நெகிழ்ச்சி உடன் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் லால் சலாம் படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடைய உள்ளது.
அதன் பிறகு ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி கலந்து கொள்ள உள்ளார். அது முடிந்தவுடன் நடிகர் ரஜினியின் அடுத்த திரைப்படம் ஆன ஜெய் பீம் இயக்குனர் உடன்படத்தை தொடங்கி உள்ளார்.