சினிமா

மாநாடு திரைப்படத்தில் பாகுபலி வில்லன் ! இதுக்கு தான் நிறுத்தப்பட்டதா லூப்

Rana Daggubati Maanadu

நடிகர் சிம்பு திரைப்பட வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கிய இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையை அமைத்தார்.மாநாடு திரைப்படம் நடிகர் சிம்புவின் திரைப்பட வாழ்க்கையில் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றது.

ஒட்டுமொத்தமாக 118 கோடி ரூபாய் இந்த படம் வசூல் செய்ததாக மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அண்மையில் அறிவித்தார். சயின்ஸ் பிக்சன் கதையை இயக்குனர் வெங்கட் பிரபு சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் கமர்சியல் ஆக எடுத்து இந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினார். மாநாடு திரைப்படம் தெலுங்கில் loop என்று Dub செய்யப்பட்டு ரிலீஸ் செய்வதாக இருந்தது.

Advertisement

இந்த படத்தின் தெலுங்கு டப்பிங்கிலும் நடிகர் எஸ் ஜே சூர்யாவே பேசினார். தற்போதுள்ள நடிகர்கள் தெலுங்கு மார்க்கெட்டையும் குறி வைத்து படங்களை நடித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் ஆகிய படங்களை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டார். இதனால் மாநாடு திரைப்படம் தெலுங்கில் சிம்புவுக்கு மிகப்பெரிய ஓபனிங் தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லூப் திரைப்படம் தெலுங்கில் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

இந்த நிலையில் மாநாடு திரைப்படம் நிச்சயம் ஹிட்டாகும் என அறிந்த தெலுங்கு பட நிறுவனங்கள், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கலந்து ஆலோசித்து தெலுங்கில் படத்தை ரிலீஸ் செய்வதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு பதில் தெலுங்கு உரிமையை தங்களுக்கு தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டனர்.

Advertisement

முதலில் இந்த படத்தின் நாக சைதன்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது ரானா ரகுபதி ஹீரோவாக இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.கடைசியாக ராணா டகுபதி மலையாளத்தில் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தை ரீமேக் செய்தார். தற்பொழுது மீண்டும் தமிழ் படம் ரிமேக் ஒன்றில் அவர் நடிக்க இருக்கிறார். எனினும் சிம்புவின் அசத்தல் ஸ்டைலிஷ் நடிப்பை ராணாடகுபதியால் ஈடு செய்ய முடியுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top