தெலுங்கில் லீடர் திரைப்படத்தின் அறிமுகமானவர் பிரபல நடிகர் ராணா. தமிழில் ஆரம்பம் என்ற அஜித் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் அவர் பிரபலமானது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகிய பாகுபலி திரைப்படத்தில் மூலமாகத்தான்.
பெங்களூர் நாட்கள் , என்னை நோக்கி பாயும் தோற்றா போன்ற தமிழ் திரைப்படங்களிலும் நடிகர் ராணா நடித்தது குறிப்பிடத்தக்கது . இப்படி துணை கதாபாத்திரங்களாகவே தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும். ராணா கம்பீரமான உடல் அமைப்பை கொண்டவர் ஆனால் கதாநாயகனாக நடிப்பதை விட அவருக்கு வில்லனாக நடிப்பது தான் மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதை பலரின் கருத்து.
தமிழ், ஹிந்தி ,தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ராணா ஒரு பேட்டியில் பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியை எனக்கு மிகவும் பிடிக்கும் .அவருடைய பயோகிராபியில் நான் நடிக்க விரும்புகிறேன் என்ற பதிவை குறிப்பிட்டிருந்தார்.
பொதுவாக கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் போன்ற பலருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படங்களாக இயக்குவது இப்பொழுது வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கிறது.
அதேபோல் பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வாழ்க்கை வரலாறு இயக்குவதற்கும் அவர் தகுதி படைத்தவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது .தனக்கு பிடித்த குத்துச்சண்டை வீரரின் வாழ்க்கை வரலாற்றில் தான் அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் ராணா குறிப்பிட்டது அது திரைப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் இது குறித்து நடிகர் ராணா பல இயக்குனர்களிடம் பேசி வருவதாகவும் இதனால் விரைவில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.