Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாகாலத்தால் அழியாத பல கதாப்பாத்திரம்.. சரத் பாபு காலமானார்.. திரையுலகம் கண்ணீர்

காலத்தால் அழியாத பல கதாப்பாத்திரம்.. சரத் பாபு காலமானார்.. திரையுலகம் கண்ணீர்

பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலம் பாதிப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு கடந்த மூன்றாம் தேதி காலமாகிவிட்டதாக செய்திகள் வெளியானது.

- Advertisement -

எனினும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இந்த செய்தியை மறுத்தனர். இந்த நிலையில் உடல் நலம் தேடி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சரத்பாபு இன்று காலமானார். தமிழ் தெலுங்கு என 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சரத் பாபு நடித்திருக்கிறார்.

- Advertisement -

தமிழில் திரு பாலச்சந்தர் இயக்கத்தில் பட்டினப்பிரவேசம் திரைப்படத்தில் சரத்பாபு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் 1970 மற்றும் 80 ஆண்டுகளில் கொடி கட்டி பறந்தவர். குறிப்பாக இயக்குனர் மகேந்திரனின் மனதுக்கு பிடித்த நடிகராக சரத்பாபு விளங்கினார்.

- Advertisement -

செந்தாலைப் பூவில் வந்தாடும் தென்றல் போன்ற பாட்டில் நடித்ததன் மூலம் சரத் பாபு மிகவும் பிரபலம் ஆனார். அண்ணாமலை ,சலங்கை ஒலி ,உச்சகட்டம், கனவுகள் கற்பனைகள், முத்து, முடிவல்ல ஆரம்பம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை சரத்பாபு பெற்றிருக்கிறார்.

அதுவும் அசோக் கதாபாத்திரத்தில் அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்ததை நயிட்டிஸ் கிட்ஸ் அவ்வளவு சீக்கிரமாக மறக்க மாட்டார்கள். இதே போல் முத்து திரைப்படத்தில் ரஜினியின் எஜமானாக வரும் சரத்பாபு அந்த கதாபாத்திரத்தை பின்னி பெடல் எடுத்து இருப்பார்.

நடிகர் விஜயுடன் புதிய கீதை பிரசாந்து உடன் ஷாக் போன்ற திரைப்படத்திலும் சரத் பாபு நடித்தார். சரத்பாபுவின் மறைவு தமிழக ரசிகர்களை மட்டும் இல்லாமல் தெலுங்கு ரசிகர்களையும் வேதனை அடைய செய்திருக்கிறது.

Most Popular