Tuesday, July 8, 2025
- Advertisement -
Homeசினிமாரஜினிக்கு எதிர்காலத்தில் நடக்கப் போவது முன்பே தெரியும்- சரவணன் பேச்சு

ரஜினிக்கு எதிர்காலத்தில் நடக்கப் போவது முன்பே தெரியும்- சரவணன் பேச்சு

1991 ஆம் ஆண்டு வைத்தி வந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சரவணன்.அதைத்தொடர்ந்து அவர் பொண்டாட்டி ராஜ்ஜியம் அபிராமி மாமியார் வீடு என்று தொடர்ந்து நிறைய திரைப்படங்களை நடித்திருந்தார்.

- Advertisement -

அதற்குப் பிறகு சில நாட்கள் சினிமாவில் நடிக்காமல் கோயில் இருந்த நடிகர் சரவணன் மீண்டும் 2007 ஆம் ஆண்டு நடித்த கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வருகை தந்தார். நடிகர் சரவணன் ஹீரோவாக நடிக்கும் காலத்திலேயே இவருக்கென்று பெருமளவில் ரசிகர்கள் இருந்ததில்லை.

ஆனால் இவருடைய நடிப்புக்கு பட வாய்ப்புகள் கிடைத்து கூறிய திரைப்படங்கள் நடித்திருக்கிறார்.அதற்குப் பிறகு இவர் நடித்த பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் இவருக்கென்று ரசிகர்கள் குவிய தொடங்கினார்கள். அதில் அவருடைய நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

- Advertisement -

அதற்குப் பிறகு அரண்மனை, கடைக்குட்டி சிங்கம் ,கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து வந்தார் நடிகர் சரவணன். இதற்கு இடையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 ஒரு கண்டஸ்டனாக கலந்து கொண்ட சரவணன் அந்த சீசனில் அவருடன் கலந்து கொண்ட கவின் தர்ஷன் முகில் மற்றும் சாண்டி மாஸ்டர் நடிகர் சரவணன் சித்தப்பா என்று கூறி பிரபலப்படுத்தினார்கள்.

- Advertisement -

ஆனால் அந்த பிக் பாஸ் சீசனில் நடிகர் சரவணன் நாம் இளம் வயதில் பெண்களை கேலி கிண்டல் செய்வதற்காகவே பஸ்ஸில் பயணிப்பேன் என்று அவர் வாயால் கூறியதை அவருக்கு ஆபத்தாகியது.இவருடைய நடத்தையின் காரணத்தினால் அந்த சீசனை விட்டு நீக்கப்பட்டார் நடிகர் சரவணன்.

அதற்குப் பிறகு நீண்ட நாள் கழித்து தற்பொழுது ஒட்டுமொத்த சினிமா உலகம் திரும்பி பார்த்த இயக்குனர் நெல்சன் திலிப் குமாரின் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகர் சரவணன்.

ஜெயிலர் திரைப்படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள். அவரை என்றும் சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்து வரும் இந்த சமயத்தில் அவர் அரசியலுக்காக சில வேலைகளை செய்து வருகிறார் என்றும் அதுவும் அவர் பாஜகவில் உடன் இணைந்து இருப்பதாகவும் சில தகவல்கள் வெளிவந்தது.

இதைப்பற்றி ஒரு இன்டர்வியூவில் நடிகர் சரவணன் பேசும் பொழுது என்னை பொறுத்தவரை அவர் சாதாரண மனிதன் அல்ல. ஒரு ரிஷிகலை போன்று அவரிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது.நடக்கப் போவது நடந்தவை என்று எல்லாவற்றையும் அவர் முன்னதாகவே அறியும் திறன் படைத்தவர்.

அவர் இமயமலை சென்றார் என்றால் அது ஏற்கனவே அவர் படம் வெற்றி அடையப்போவது என்பதை அறிந்து விட்டார் என்பதற்கான அர்த்தம் ஆகும்.

அதற்காகத்தான் அவர் சென்று இருப்பார் அவருக்கு எந்த பதவியும் பட்டமும் தேவையில்லை அவர் இன்னும் நூற்றாண்டு காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நடிகர் சரவணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கூறியிருக்கிறார்.

இதன் மூலம் நடிகர் சரவணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மீது எந்த அளவிற்கு மரியாதையும் நேசமும் வைத்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

Most Popular