Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாட்விட்டர் தளத்தில் அட்லீ குழந்தை பெயரை கூறிய நடிகர் ஷாருக் கான் - விளக்கம் அளித்துள்ள...

ட்விட்டர் தளத்தில் அட்லீ குழந்தை பெயரை கூறிய நடிகர் ஷாருக் கான் – விளக்கம் அளித்துள்ள இயக்குனர் அட்லி

வெற்றி படங்களின் இயக்குனர் என்றும், தமிழ் திரையுலகின் எதிர்காலம் என்றும் அழைக்கப்படும் இயக்குனர் அட்லி அவருடைய மகனின் பெயரை நேற்று பொதுவெளியில் அறிவித்துள்ளார்.

- Advertisement -

தமிழ் திரை உலகில் தான் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இயக்குனர்களில் ஒருவராக இளம் இயக்குனரான அட்லியும் உள்ளார். இவர் இயக்கிய திரைப்படம் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே அமைந்திருந்தன.

இயக்குனர் அட்லி தமிழ் திரை உலகில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நான் சந்தித்த முதல் பந்திலையே சிக்ஸர் அடித்தது போல இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது. இதனை தொடர்ந்து அடுத்த ஒரு இயக்கிய மூன்று படங்களும் நடிகர் விஜய் வைத்து இயக்கினார். இந்த படங்கள் கதையில் கொஞ்சம் சர்ச்சைகள் இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷனை அள்ளியது. இதன் மூலம் இயக்குனர் அட்லி திரைப்படம் இயக்கினால் அந்த படம் கட்டாய வெற்றி படம் என்று தமிழ் திரையுலகில் இன்று வரை அவர் அறியப்படுகிறார்.

- Advertisement -

தமிழ் மொழியை தாண்டி இந்தி மொழியிலும் கால் பதிக்க துவங்கி விட்டார். ஹிந்தி யின் சூப்பர் ஸ்டார் நடிகரான ஷாருக்கான் வைத்து ஜவான் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி வெளியாக உள்ளது என்று பல குழு அறிவித்து இருந்தது.

- Advertisement -

கடந்த நாட்களுக்கு முன்பு நடிகர் ஷாருக்கான் வலைதளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில் இயக்குனர் அட்லியின் மகன் பெயர் மீர் என்று பதிவிட்டு இருந்தார். அதை உறுதி செய்யும் வகையாக இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி இருவரும் அந்த பதிவிற்கான பதிலை தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் இயக்குநர் அட்லீ இன்ஸ்டாகிராம் தளத்தில் ” ஆம் பெயர் மீர்,எங்கள் குட்டி தேவதைகளின் பெயரை வெளிப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” இன்று பதிவிட்டிருந்தார்.

மேலும் ட்விட்டரில் இயக்குனர் அட்லீ பற்றி நடிகர் ஷாருக்கானிடம் கேட்கும்போது அதற்கு ” அட்லி மிகவும் புத்திசாலி மற்றும் திறமையான இயக்குனர். அவருக்கும் அவரின் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவியின் என்னிடம் அதிகமாக அன்பு பாராட்டுகிறார்கள், இதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ” என்று அந்த பதிவில் கூறியிருந்தார்

Most Popular