Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமா19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சித்தார்த், மாதவன்.. ஹீரோயின் யார் தெரியுமா?

19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சித்தார்த், மாதவன்.. ஹீரோயின் யார் தெரியுமா?

- Advertisement -

2004 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஆயுத எழுத்து என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தில் சித்தார்த், மாதவன் சூர்யா என முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்கள்.

இதில் நடித்த சித்தார்த் மற்றும் மாதவன் 19 ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார்கள். இந்த திரைப்படம் கிரிக்கெட் சம்பந்தமான கதைகளத்தை கொண்டு எடுக்கப்பட இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு தி டெஸ்ட் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் உடைய கதாநாயகியாக தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா நடிக்க இருக்கிறார்.

- Advertisement -

இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோ என்ற நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும் இந்த ஒய்நாட்  ஸ்டூடியோவின் தயாரிப்பு நிறுவனரான சசிகாந்த் தான் இந்த திரைப்படத்தை இயக்கவும் இருக்கிறார். இவர் இதற்கு முன்பு தமிழ் படம் வா வாயை மூடி பேசவும், இறுதிச்சுற்று போன்ற திரைப்படங்களை தமிழில் தயாரித்து இருக்கிறார்.

- Advertisement -

தயாரிப்பாளராக இருந்த சஷிகாந்தை இயக்குனராக மாற்றும் முதல் திரைப்படம் டெஸ்ட் ஆகும்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நடிகர் மாதவன் ராக்கெட்ரி என்ற அறிவியல் பூர்வமான ஒரு திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் மாதவனுக்கு இதற்குப் பிறகு புதுப்புது ரசிகர்களும் உருவாகி வந்தார்கள்.

இதைத் தொடர்ந்து இவர் ஜிடி நாயுடுவின் என்ற அறிவியல் மாமேதையின் பயோகிராபியை படமாக இயக்கி நடிக்க இருக்கிறார். இவர் ஒரு தமிழகத்தை சேர்ந்த அறிவியல் மாமேதை என்பதால் இவரை பலருக்கும் தெரிந்திருக்கும். இதனால் திரைப்படத்தின் மீது ஒரு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு இடையில் இவர் நடிக்க இருக்கும் தி டெஸ்ட் திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் இருந்து துவங்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Most Popular