நாயகன் மீண்டும் வரார் என விக்ரம் திரைப்படத்தில் பாடல் அமைந்தது. தற்போது மீண்டும் உண்மையாகி விட்டது. நடிகர் கமல்ஹாசன் தற்போது மிகவும் பிசியாக திரையுலகத்தில் இயங்கி வருகிறார். நடிப்பு தயாரிப்பு என கலக்கும் கமல்ஹாசன் தற்போது அடுத்தடுத்து மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
இந்தியன் 2 வில் நடைபெறும் கமல்ஹாசன் அடுத்ததாக இயக்குனர் மணிரத்தினத்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசனும் மணிரத்தினமும் இணைந்து பணியாற்ற உள்ளதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது கமல்ஹாசனின் 234 வது திரைப்படம் ஆக உள்ளது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடிக்க வைக்க இயக்குனர் மணிரத்தினம் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சிம்புவின் திரைப்படம் ஒன்றை ராஜ் கமல் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.
இதனால் சிம்புவும் கமல்ஹாசனும் நல்ல நட்பில் இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக சிம்புவை படத்தில் நடிக்க வைக்க கமல் விரும்புகிறாராம். சிம்பு ஏற்கனவே மணிரத்தினம் படத்தில் நடித்த அனுபவம் உள்ளதால் இந்தப் படத்தில் அவரும் நடித்த ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இது கமலின் படத்தின் பிசினஸையும் அதிகரிக்க ஒரு யுத்தியாக கூட பயன்படுத்தப்படலாம். நாயகன் பாணியில் இந்தத் திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமலும் சிம்புவும் முதன்முறையாக இணைந்து நடிக்க இருப்பதாக வெளியான தகவல் இரு ரசிகர்களையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியன் 2 ஷூட்டிங் முடிந்தவுடன் மணிரத்தினம் படத்தின் ஷூட்டிங் கமல் தொடங்க இருக்கிறார்.அதன் பிறகு எச் வினோத் பா ரஞ்சித் என வரிசையாக படங்களில் கமல் நடிக்க இருக்கிறார். மணிரத்னம் , கமல் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரீலிஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.