சினிமா

நடிகர் சிம்புக்கு துபாய் அரசு வழங்கியுள்ள அங்கீகாரம் ! கமல் வரிசையில் இணைந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி

Silambarasan dubai golden visa

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவர் சிம்பு. ரசிகர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவார். கமலுக்கு பிறகு நடிப்பு ,இயக்கம் , நடனம், இசை, எடிட்டிங் , திரைக்கதை என அனைத்திலும் திறமைகளை வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்களை உருவாக்கியவர் . ஒரு காலத்தில் மன்மதன் , வல்லவன் , கோவில் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

இளம் நடிகர்களில் சிம்புவுக்கு ஈடு இணை யாரும் இல்லை என்ற நிலையில் விளங்கினார். இந்த நிலையில் தான் சிம்புவுக்கு பல்வேறு விதங்களில் பிரச்சனைகள் உருவாகின. நடிகர் சிம்பு சரியாக ஷூட்டிங் வரவில்லை என்று தயாரிப்பு நிறுவனங்கள் குற்றம் சாட்டின. தாம் ஒப்புக் கொண்ட படங்களில் பாதியில் நிறுத்திவிட்டு கதை எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி படப்பிடிப்பு தளத்திற்கு வர மாட்டேன் என்று சிம்பு பிரச்சனை செய்ததாகவும் புகார்கள் குவிந்தன. மெல்லிய வசீகரத் தோற்றத்தில் இருந்த சிம்பு மது போதை பழக்கங்களால் உடல் எடை கூடி, தனது ஃபார்மை இழந்தார். மறுபுறம் தனுஷ் பல வெற்றி படங்களை நடித்து பல உச்சங்களை அடைந்தார்.

Advertisement

ஆனால் சிம்புவோ திரைப்படத்தை நடிக்காமல் இருந்தது அவரது ரசிகர்களை எரிச்சல் அடைய செய்தது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான அன்பானவன், அசராதவன், அடங்காதவன் திரைப்படம் அவருக்கு பெரும் சரிவை தந்தது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இதனால் சிம்புவுக்கு திரைப்படத்தில் நடிக்க ரெட் கார்டு எனப்படும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த சிம்பு மீண்டும் பழைய பாதைக்கு திரும்ப வேண்டும் என முடிவெடுத்தார். தனக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்ட சிம்பு, முதலில் மதுப்பழக்கத்தை நிறுத்திவிட்டு உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

100 கிலோவுக்கு மேல் இருந்த சிம்பு ஏழு மாதத்தில் 30 கிலோ குறைத்து மெல்லிய தோற்றத்திற்கு திரும்பினார். அதன்பின்னர் தம் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கும் விதத்தில் 18 நாட்களில் ஈஸ்வரன் திரைப்படத்தை நடித்துக் கொடுத்தார். இதனால் சிம்பு மீது மீண்டும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை வந்தது .சிம்புவால் பல ஆண்டுகள் தாமதமான மாநாடு திரைப்படம் மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து வெளியான இந்த திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. முதல் 100 கோடி வசூல் பெற்ற சிம்பு படம் என்ற பெருமையை பெற்றது.

Advertisement

இதேபோன்று பெண்கள் குழந்தைகள் இடையே தனது மார்க்கெட் விரிவாக்க நினைத்த சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் தொடரில் கமலுக்கு பதிலாக தொகுப்பாளராக பணியாற்றினார். இதன் மூலம் நடிகர் சிம்புவுக்கு மீண்டும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகின . இந்த நிலையில் தான் துபாய் அரசு அவர்களது நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கோல்டன் விசா என்ற திட்டத்தை இந்தியாவில் உள்ள சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி வருகின்றன. தென்னிந்திய நடிகர்களான மம்முட்டி ,மோகன்லால் ,நடிகர் கமல்ஹாசன், சரத்குமார், இயக்குனர் வெங்கட் பிரபு போன்றோர்களுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்தன. இந்த வரிசையில் தற்போது நடிகர் சிம்புவும் இணைந்துள்ளார் கோல்டன் விசா மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு துபாய்க்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வர முடியும். சிம்பு அவ்வளவுதான் எனக்கு கருதிய அனைவருக்கும் தனது செகண்ட் இன்னிங்ஸ் மூலம் ஆச்சரியத்தை அளித்துள்ளார் எஸ் டி ஆர் எனப்படும் சிலம்பரசன்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top