Thursday, December 5, 2024
- Advertisement -
Homeசினிமாமனைவி வந்த பிறகு தான் லக் வந்தது.. ரஜினி சாரை பார்த்து காப்பி அடிச்சேன் -...

மனைவி வந்த பிறகு தான் லக் வந்தது.. ரஜினி சாரை பார்த்து காப்பி அடிச்சேன் – சிவகார்த்திகேயன்

- Advertisement -

கௌதம் கார்த்திக் நடிக்கும் 1947 திரைப்படத்தின் விழாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஏ ஆர் முருகதாஸ் தயாரிக்கும் இந்த படத்தை பொன் குமார் என்ற அவரது துணை இயக்குனரே எடுக்கிறார். இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் 1947 திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைகளத்தை கொண்டிருப்பதால் சுதந்திரம் அடைந்த அந்த தருணத்தில் நம் அறியாத கதை ஒன்று இயக்குனர் சொல்லி இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் பாராட்டி இருக்கிறார். முதல் படத்தில் இவ்வளவு பெரிய சவாலை எடுத்து செய்துள்ள இயக்குனரை பாராட்டுவதாகவும் 49 நாட்களில் இயக்குனர் படத்தை முடித்து இருப்பதாகவும் ஆச்சரியத்துடன் கூறியிருக்கிறார். இதேபோன்று சவாலை ஏற்கத் துணிவு உள்ளவன் மட்டும் தான் வாழ்க்கையில் வெற்றி பெற தகுதியானவன் என்பதை இயக்குனர் நிரூபித்திருப்பதாகவும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டார்.

நடிகர் கார்த்திக் மிகவும் பிடிக்கும் என்று அவருடைய நடிப்பில் எந்த நடிகரின் சாயலும் தெரியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ள சிவகார்த்திகேயன், எனது நடிப்பில் பாதி ரஜினி சாரை பார்த்து காப்பியடிப்பது தான் என்று கூறி உள்ளார். தமக்கு திருமணம் ஆன பிறகு தான் அதிர்ஷ்டம் வந்ததாகவும் திருமணம் என்றாலே பலர் ஐயோ மாட்டிக்கப் போற என்று கிண்டல் செய்து வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள சிவகார்த்திகேயன் ஆனால் அது உண்மை அல்ல என்று கூறியுள்ளார்

- Advertisement -

விஜய் டிவியில் அங்கு ஒரு ஷோ இங்கு ஒரு ஷோ என்று செய்து கொண்டிருந்த போது மனைவி வந்த பிறகுதான் அவருக்கு என தனி சோ வந்ததாக கூறியுள்ளார். இதனால் திருமணம் ஆன பிறகு அனைவருக்கும் ஒரு அதிர்ஷ்டம் வரும் என்று குறிப்பிட்ட சிவகார்த்திகேயன்,  கௌதம் கார்த்திக் அடுத்தடுத்து படம் வருவதால் அந்த அதிர்ஷ்டம் உங்களுக்கும் வந்து விட்டதாக கூறியுள்ளார்.

- Advertisement -

முருகதாஸ் தயாரிப்பில் எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படம் முதல் முதலாக வந்ததை நினைவு கூர்ந்த சிவகார்த்திகேயன். அந்த நிகழ்ச்சிக்கு இதே மேடையில் தான்  தொகுத்து வழங்கியதாகவும் பிறகு அவர் தயாரித்த மான்கராத்தே படத்தில் தான் ஹீரோவாக நடித்ததாகவும் தற்போது அவருடைய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்திருப்பதாகவும் இன்னும் ஒரு விஷயம் பாக்கியிருக்கிறது அதுவும்  நடக்கும் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். என்னுடைய இந்த பயணத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமான தமிழக மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார் .

Most Popular