Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாசால்வையை தூக்கி வீசியதற்கு காரணம் இருக்கிறது .. !சிவக்குமார் கொடுத்த பேட்டி..!

சால்வையை தூக்கி வீசியதற்கு காரணம் இருக்கிறது .. !சிவக்குமார் கொடுத்த பேட்டி..!

பிரபல நடிகரும் நடிகர் கார்த்திக் மற்றும் சூர்யாவின் தந்தையும் ஆகிய நடிகர் சிவக்குமார் இரண்டு நாட்களுக்கு முன்பு காரைக்குடியில் ஒரு புத்தக கண்காட்சி ஒன்றிற்கு வருகை தந்திருந்தார். அங்கு ஒரு முதியவர் ஒருவர் அவரிடம் பரிவோடும், அன்போடும் ஒரு சால்வையை கொடுக்க அதை அகம்பாவத்துடன் வாங்கி வீசி எறிந்து விட்டார் நடிகர் சிவகுமார்.

- Advertisement -

இதுபோன்று ரசிகர்களிடம் இவர் நடந்து கொள்வது புதிது அல்ல. இதற்கு முன்பு இரண்டு முறை இவரிடம் செல்பி எடுக்க முயன்றவர்களின் அலைபேசியை தட்டிவிட்டு அவமதித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் எல்லாம் அவர்களின் ரசிகர்களிடம் பண்போடு நடந்து கொள்வதும் அகரம் என்ற நிறுவனத்தின் மூலம் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு படிப்பை இலவசமாக தருவதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் .ஆனால் அவர்களின் தந்தை இவ்வாறு நடந்து கொள்வது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

- Advertisement -

நடிகர் சிவகுமார் ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் அகந்தையுடன் நடந்து கொள்ளக் கூடியவர் தான் என்பது பலரின் கருத்தாக இருந்தாலும் .அவரின் பிள்ளைகள் அந்த பெயரை மாற்றினார்கள் என்பதும் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்.

- Advertisement -

இந்நிலையில் காரைக்குடியில் நடந்த அந்த சம்பவத்தை குறித்து நடிகர் சிவகுமார் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். தனக்கு சால்வை தந்த அந்த பெரியவர் எனது நண்பர் கரீம். எனக்கு சால்வை போற்றுவது புடிக்காது என்பது அவருக்கும் தெரியும் .அன்று புத்தகக் கண்காட்சி முடிவதற்கு வெகுநேரமானதால் நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன். அந்த சமயத்தில் அவர் எனக்கு சால்வை தந்தது எரிச்சலாகி விட்டது .அதனால் நான் அதை வீசி எறிந்து விட்டேன் எனக்குப் பிடிக்காத சால்வையை தெரிந்தே எனக்கு கொடுத்தது நண்பர் கரீமின் தவறு. அதை வாங்கி வீசியது என்னுடைய தவறு என்று நடிகர் சிவகுமார் பேசும் பொழுது அருகில் சால்வை தந்த அந்த முதியவரும் அதாவது சிவகுமாரின் நண்பர் அறிவும் அமர்ந்திருந்தார்.

நடிகர் சிவகுமாருக்கு வயதாகி விட்டதால் இது போன்ற விஷயங்களை அவர் செய்கிறாரோ என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள் .ஆனால் நடிகர் சிவகுமார் கொஞ்சம் நிதானமாக நடந்து கொண்டால் யாருக்கும் எந்த பங்கமும் விளையாது என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது.

Most Popular